பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வேரில் பழுத்த பலா

வீட்டுக்குப் போயிடலாம். அம்மாவுக்கும் கடைசி காலம். எனக்குக் கரையேறுற காலம். உதாசீனம் செய்யுறானோ? இருக்காது. நம்ம அண்ணின்னு என்னை ஒருகாலத்துல கண்டபடி அந்த சண்டாளன் திட்டுனதை, இன்னிக்கும் நெனச்சுட்டு இருக்கானே. அநியாயம் செய்யாமலே மாட்டிக்கிட்டுத் தவிக்கிறேன்னு சொன்னானே. என்ன மாட்டல்? நாமே கேட்கலாம்.

"என்ன. ஒரு மாதிரி இருக்கிங்க?" அவள் கேட்டாள். "எல்லாம் உங்களாலதான்."

"என்னாலயா?" "ஆமா. வேலையில் சேருறதுக்கு முன்னால, ஒங்க அண்ணன், வழக்குல அரை கிளாஸ் டி கூட வாங்க மாட்டாரு. நீயும் அப்படி இருக்கணுமுன்னு சொன்னீங்க. நான் வேற எது வாங்காட்டாலும். சில சமயம். காண்டிராக்டர்கிட்ட காபி குடிச்சேன். அது தப்புத்தானே. தண்டனை நியாயந்தானே."

"நீங்க பாட்டுக்கு." "ஏது. இங்க வருது. சர்த்தான். பேசுனால், நீ நான்னு பேசுங்க, இல்லன்னா போங்க."

"இன்னிக்கு ஒன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்குப்பா. காச்ச மரத்துலதான் கல் விழும். அதுக்காப் போய்."

"இப்போ.. எனக்கு எதுவும் இல்லை. நீங்கதான் கொஞ்ச நாளாய் ஒரு மாதிரி இருக்கீங்க."

"அப்டி ஒண்னுமில்லியே." "எனக்கு தெரியும் அண்ணி. அம்மா இந்த வீட்ல உங்களுக்கு உரிமை இல்லன்னு குத்திக் காட்டுறாள். வசந்தா ஆமாம் போடுறாள், சரிதானே?"

"அப்டில்லாம் அதிகமாய்." "ஓஹோ. அப்போ கொஞ்சமாய் இருக்குது. "ஒன்கிட்ட வாயைக் கொடுத்திட்டால் அப்புறம் மீள முடியுமா?" "நீங்க என்கிட்ட மீளமுடியாமல் இருக்கணுமுன்னு ஒரு முடிவு செய்துட்டேன். எங்கம்மாவோட போக்கும், நாய் வாலும் ஒரே மாதிரி. நேராகாது. ஒங்களுக்கு இந்த வீட்ல உரிமை உண்டுன்னு அம்மா எப்போதும் நினைக்கணும். அதுக்காக ஒரு முடிவு செஞ்சிருக்கேன். ஒங்க தங்கை ஒண்னு காலேஜ்ல படிச்சுட்டு சும்மா தானே இருக்குது?"