பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 41

"ஆமாம். நீ எதுக்கு."

'அவளை சின்ன வயசுல பார்த்தது; எனக்குக் கட்டிக் கொடுப்பாங்களா? கல்யாணம் ஆகட்டும். அப்புறம் ஒங்க மாமியார் என்ன பேசுறாள்னு பார்ப்போம். லெட்டர் எழுதுங்க அண்ணி. ஆனால் ஒன்று. ஒங்க தங்கை ஒங்களை மிரட்டுறாள். எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசுறாள்னா, கொன்னுப்புடுவேன் கொன்னு."

"எந்தப் பெண்ணையும் - அவள் மோசமானவளாய் இருந்தாலும்அடிப்பது அநாகரீகம்"

"நான் நாகரிகமாய் கேட்டால், கொடுக்க மாட்டிங்க. நானே போய் கூட்டிட்டு வந்துடட்டுமா"

"ஒன்னைக் கட்டிக்க அவளுக்குக் கொடுத்து வச்சிருக்கணும். இப்போ அதுக்கு அவசரமில்ல. வசந்தா தான் அவசரம்."

"என்ன அண்ணி சொல்lங்க?" "அவளுக்குக் காலா காலத்துல முடிச்சுடனும். ஒன் கல்யாணம் எப்போ வேனுமானாலும் நடக்கட்டும். ஆனால் அவள் கல்யாணம் இப்பவே நடக்கணும்."

"அவளுக்கு என்ன அவசரம்? மொதல்ல வேலைக்குப் போகட்டும்."

"நான் சொல்றதைக் கேளுப்பா. நாளையில் இருந்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிற வேலையைத் துவக்கு. இப்போ, அவளுக்குத் தேவை வேலையில்ல. கல்யாணம்."

"என்ன பூடகமாய் பேசுறீங்க?"

"பூடகமும் இல்ல. எதுவும் இல்ல. ஏதோ மனசுல தோணுது. உண்மையைச் சொல்லப் போனால். ஒன்னைவிட இப்போ எனக்கு அவள் மேலதான் கவலை.

"சரி. ஒங்க கவலையைத் தீர்க்கறதுக்காவது. மாப்பிள்ளை பார்க்கேன்."

தங்கம்மா, பூரிப்போடு புன்னகைத்தாள். சரவணன் இன்னும் குழந்தை மாதிரிதான். இடுப்பில் இருந்த பிள்ளை, என்னமாய் வளர்ந்துட்டான். வாரவங்ககிட்டயும், போறவங்கக்கிட்டயும், எவ்வளவு பக்குவமாய் அழுத்தமாய் பேசுறான். எல்லாத்துலயும் அவன் அண்ணன் மாதிரி. இல்ல. இல்ல. அவரை மிஞ்சிட்டான். இன்னும் மிஞ்சணும்."