பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 43

செளரி, பத்மாவின் பக்கத்தில் வந்து, அவளை அதட்டுவது போல் பேசினார்.

"நீ வேற. பாவம் காலனிப் பொண்ணு. இது பார்க்கக்கூடிய ஒரு வேலை டெஸ்பாட்ச்னு பாவம் பார்த்தோம் பாரு, நமக்கு இதுவுய வேணும். இன்னமும் வேணும்."

உமா, அன்னத்தில் முன்னால் வந்தாள். "நான் இந்த ஆபீஸர் கூட மட்டுமல்ல. இவரை விட பெரிய பெரிய ஆபீஸருங்க கிட்டேகூட நெருக்கமாய் பழகி இருக்கேன். யாரைப் பத்தியாவது வத்தி வச்சிருப்பேனான்னு இவங்க கிட்டேயே கேளு. ஏதோ அவரு லேசாய் சிரிச்சுப் பேசிட்டார்னு. இப்படியா வத்தி வைக்கிறது? ஒன்னைப் பற்றி வத்தி வெச்சு. அதை நெருப்பாய் மூட்டறதுக்கு எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? சீ. கடைசில ஒன் புத்தியை காட்டிட்டியே."

அன்னம் திண்டாடியதில், பத்மாவுக்குக் கொண்டாட்டம். "சொல்றதை நல்லா கேளுடி. நீ அவருகிட்டே... மினுக்கிக் குலுக்கிச் சொன்னால்கூட எங்களுக்கு அனாவசியம். இந்த ஆபீஸ்ஸுக்கு அஸிஸ்டெண்ட் டைரக்டராய் எத்தனையோ பேரு வருவாங்க. போவாங்க. எவரும் மூணு வருஷத்துக்கு மேல. நிரந்தரமாய் இருக்கப் போறதில்ல. நாங்கதான் நிரந்தரம். நீ ஆடுனாலும், சரவணன் இருக்கதுவரைக்குந்தான் ஆட முடியும். ஒன்னோட வேலைத் திறமையைப் பற்றி எழுதப்போறது நான். அதைச் சரியான்னு பார்க்கப் போறது செளரி ஸ்ார். அலிஸ்டென்ட் டைரக்டர் மொட்டைக் கையெழுத்துத்தான் போடணும். புள்ளி வச்சோமுன்னால், அது ஒன் உத்தியயோகத்துல, கமாவா இருக்காது. புல்ஸ்டாப்தான். புத்தியோட பிழைச்சுக்கோ. அவ்வளவுதான் சொல்லலாம்."

அன்னம், மருவி மருவிப் பார்த்தாள். கண்கள் அவளைக் கேளாமலே நீரைச் சுரந்தன. தொண்டை அடைத்தது. அவள் சித்திகூட இப்படி அவளைக் குரோதமாகப் பார்த்ததில்லை. ஏன் திட்டுறாங்க? என்னத்த சொல்லிட்டேன்? நேற்று, சரவணன் அவளை குசலம் விசாரித்தது மனத்திற்கு வந்தது. குசலம் விசாரிப்பதுபோல் விசாரித்து, அந்த ஆள் புலன் விசாரணை செய்திருக்கான். படுபாவி நான் என்றால் அவனுக்குக்கூட இளக்காரம்.

அன்னம், விக்கி விக்கி, திக்கித் திக்கிப் பேசினாள்: "நானாய் எதுவும் சொல்லல. அவராய் கேட்டாரு. அவராய்தான் கேட்டாரு. தெரியாத்தனமாய் ஏதோ பேசிட்டேன். அப்போகூட நீங்க