பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வேரில் பழுத்த பலா

ரிஜிஸ்டர்ல அனுப்பாதே. சாதாரணமாய் அனுப்புன்னு சொன்னதை. யோசித்து யோசித்து, பயத்துலதான் சொன்னேன். இவ்வளவுக்கும். உங்களால் எனக்கு மெமோ கிடைச்ச போதுகூட மூச்சு விடல. என்னை நம்புங்க. நான் கோள் சொல்லத் தெரியாதவள். எனக்கு யாரும் விரோதியில்ல."

உமா, வக்கீல்போல், ஆள்காட்டி விரலை ஆட்டி ஆட்டிக் கேட்டாள்.

"நேற்று சாயங்காலமாய் அவரை எதுக்காக ஸ்பெஷலாய் பார்த்தே?"

"நான் பார்க்கல. அவராய் கேட்டாரு. இன்னைக்கு ஈவினிங்ல, ஏழு மணி வரைக்கும் ஆபீஸ்ல இருக்க முடியுமான்னு கேட்டாரு. வேணுமுன்னால். முடியாதுன்னு சொல்லிடுறேன்."

"இருக்கியான்னு கேட்டால், நீ படுக்கிறேன்னு சொல்லிஇருப்பே." உமா, கண்ணாடியைப் பார்த்துப் பேசியவள் போல், உதட்டைக் கடித்தாள். செளரிராஜன், "நல்லதுக்குக் காலமில்ல. ஒன்னையெல்லாம் அக்கெளவுண்ட் செக்ஷன்ல மாட்ட வச்சு. டிராப் செய்யனும் காலனிப் பெண்ணாச்சேன்னு கருணை வைக்கிறதுக்கு இது காலமில்ல. அவர்கிட்டே என்னெல்லாம் சொன்னியோ? எங்க தலைவிதி. காட்டான் கோட்டான் கிட்டேல்லாம் தலை குனிய வேண்டியதிருக்கு." என்று கர்ஜித்தார்.

திடீர் என்று ஒரு குரல் ஒலித்தது: "ஆமா. ஒங்க மனசுல என்ன நினைக்கிறீங்க. சொல்லுக்குச் சொல்லு. காலனி காலனின்னு சொல்றீங்க."

எல்லோரும் திகைத்தபோது, தங்கமுத்து தாவி வந்தான். வினியோகப் பிரிவு கிளார்க். நேராக, அழுது கொண்டிருந்த அன்னத்தின் முன்னால் வந்தான்.

"அன்னம். ஒங்களைத்தான். கிராமத்து சேரி குனிகிறது மாதிரி இங்கே குனிந்தால், அப்புறம். பூமியில் வந்துதான் முன் தலை இடிக்கும். இங்கே... யாரும் ஒங்களுக்கு அவங்களோட அப்பன் வீட்ல இருந்து சம்பளம் கொடுக்கல. பிச்சை போடல. யாரோட தயவாலயும் நீங்க இங்கே வேலைக்கு வரல. ஒங்க மாமா மச்சான் ஒங்களை இங்கே. அட்ஹாக்ல போட்டு, அப்புறம் நிரந்தரமாக்கல. செலக்ஷன் கமிஷன் மூலம் வந்தவங்க நீங்க. சிரிக்கிறவங்களைப் பார்த்துச் சீறணும். சீறுறவங்களைப் பார்த்து அலட்சியமாய் சிரிக்கணும். அப்போதான். நம்மை மாதிரி ஆளுங்க காலம் தள்ள முடியும். இந்த அஸிஸ்டெண்ட்