பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 45

டைரக்டர் இருக்கும்போதே இந்தப் பாடு. மற்றவங்க இருந்தால் என்ன பாடோ? இந்தா பாரு. பாவிப் பொண்ணே ஒன்னை இனிமேல், யாராவது காலனிப் பொண்ணுன்னு சொன்னால், காலணியைக் கழற்றி அடி அது ஒன்னால முடியாதுன்னால்... செட்யூல்ட்காஸ்ட் கமிஷனுக்கு கம்ப்ளெயிண்ட் கொடு. நான் எழுதித் தாறேன். அதுவும் முடியாதுன்னால். அப்புறம் நான்தான் இந்த ஆபிஸ்ல கொலைகாரனாய் ஆகணும். ஒரு கொலையோட நிற்கமாட்டேன். ஒவ்வொருத்தி ஜாதகமும் என் கையில இருக்கு. ஒன்னைப் போய் படுக்கிறவள்னு கேட்கிறாள். நீ பல்லை உடைக்கிறதுக்குப் பதிலாய், பல்லைக் காட்டி அழுகிறே. எத்தனை பேரு எத்தனை லேடிஸுக்கு, பைல் எழுதிக் கொடுக்காங்கன்னும் எனக்குத் தெரியும். காலனிப் பெண்ணாம். வேலை வராதாம்."

செளரி ஆடிப்போனார். உமா ஓடிப்போனாள். பத்மா பதுங்கிப் போனாள். அன்னம் தலைநிமிர்ந்தாள். அவனையே அண்ணாந்து பார்த்தாள். அந்தப் பார்வைச் சூட்டில், அவள் கண்ணிர் ஆவியாகியது. சரவணனின் தலை தென்பட்டது. தங்கமுத்து, இருக்கைக்குப் போய்விட்டான். அறையில் கால் வைத்தபடி, உள்ளே போகப்போன சரவணன், எதையோ நினைத்துக் கொண்டவன் போல், செளரியிடம் வந்தான்.

"மிஸ்டர் செளரி. அன்னத்துக்கு சேஞ்ஜ் கொடுத்திட்டிங்களா? ஆர்டர் ரெடியா?"

“உள்ளே வந்து. விவரமாய் சொல்றேன். ஸார்."

சரவணன் கத்தப் போனான். கூடாது. பொறுப்பான பதவியில் இருப்பவரை, பகிரங்கமாய் விமர்சிக்கக் கூடாது. உள்ளே போனவனையே அன்னம் பார்த்தாள். அவன், உட்காரு முன்னாலே, உமா போய்விட்டாள். எப்படி நெளிச்சுக் குலுக்கிப் போறாள். எங்கப்பன் கிட்டே இப்போ இரண்டாவது சம்சாரமா இருக்கவள் கலயாணத்துக்கு முன்னாலயே, அவருகிட்டே சேலையை இழுத்து இழுத்து, மூடி மூடிப் பேசுவாளே. அதே மாதிரி பேசுறாள். இந்த ஆளும் தலையை ஆட்டுறான். ஆமா. போகும்போது என்னைப் பத்தி கேட்டுட்டுப் போனாரே. ஆர்டர்னு வேற சொன்னாரு என்ன ஆர்டரு? வாயேண்டி எவ்வளவு நேரமாய் அவரை அறுக்கிறே. அப்பாவி மனுஷன். நீ முன்னால குலுக்குறதைப் பார்த்துட்டுப் பின்னால பேசாதவள்னு நினைக்காரு. இவரை எப்டில்லாம் திட்டியிருக்கே. இப்போ மட்டும் எப்டி குலுக்குறேடி?