பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வு ஏடுகள் வழியாக...

வேரில் பழுத்த பலா

உயர்ந்த நாவலில் படைக்கப்படும் கதைமாந்தர், உண்மை மனிதர்போல் ஆகிவிடுகின்றனர். கற்பனை மாந்தர் இவ்வாறு உயிரும் உணர்ச்சிமிக்க வாழ்வும் பெறுமாறு செய்தல், படைப்பவரின் அரியதிறனே ஆகும். நயங்கள் :

"உடை என்பது உடலை உடைத்துக்காட்ட அல்ல. மறைத்துக்கொள்ளவே." "நான் போட்டிப் பரிட்சை எழுதி வேலைக்கு வந்தேன். வேலைக்குன்னு பேனாவைத்தான் தொட்டேன். எவன் காலையும் தொடல."

நல்லதுக்கும் கூட இன்னொருத்தன் அதிகாரத்தை எனக்காக பயன்படுத்தக்கூடாது. "படித்த அரிசனங்ககோளட திறமை, வெட்டி எடுக்கப்படாத தங்கம். துரசி படிந்த கண்ணாடி தங்கத்தை வெட்டி எடுக்கும்போது, ஏதோ ஒரு பித்தளை இருக்குதுன்னு தங்கத்தை புதைச்சிடப்படாது. கண்ணாடியை துடைத்துப் பார்க்கணும். கைக்கண்ணாடி போதுமுன்னு அதை உடைச்சிடப்படாது."

"சம்பளம் சிகரெட்டுக்கு, கிம்பளம் வீட்டுக்குன்னு பேசறாங்க. நீ இன்னார் தம்பி என்று நியாயம் தவறாமல் நடக்கவேண்டும். நேர்மை வேற. கடவுள் வேற இல்ல. கடவுள் கைவிடமாட்டார்."

"கிராமத்துக்கு சேரி குனிகிறது மாதிரி, இங்கே குனிந்தால். (அலுவலகத்தில்) பூமியில் வந்துதான் முன்தலை இடிக்கும். சிரிக்கிறவங்களைப் பார்த்து சீறணும். சீறுறவங்களைப் பார்த்து அலட்சியமாய் சிரிக்கணும்."

"என் வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம். ஆனால், அதில் நான்தான் எழுதுவேன். யார் வேண்டுமானாலும் படிக்கலாம்."

"இந்த நாட்டில் இருந்து லாட்டரிகளும், கிரிக்கெட்டும் துரத்தப்பட்டால் ஒழிய, நாடு முன்னேறாது."

"என்றைக்கு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அரசியல்வாதி, கவிஞன், பத்திரிகை ஆசிரியன்னு ஒருவருக்கு பட்டம் வருதோ, அப்போ அவன் தன்னோட சாதிப் பட்டத்தை துறந்துடனும்."

'உண்மையான காதலுக்கு உட்படுகிறவங்க, ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கணுமுன்னு பழகமாட்டாங்க. அவங்களுக்கு பழக்கத்துலதான் காதல் வரும். எப்படி காதலிக்கனும் என்கிறதைவிட, எப்படியெல்லாம் காதலிக்கக்கூடாது என்கிறதே முக்கியம்."

'அலுவலகம் என்று மரத்தின் உச்சாணிக் கிளையில், அணில் கடித்த

பழங்களையும், பிஞ்சுப் பழங்களையும் பிடுங்காமல் பார்த்த சரவணனுக்கு, வேரில் பழுத்த பலாவாகிய அன்னம் (ஆரம்பத்தில் பார்வையில் படாமல் போய்விட்டது."

க. ரேவதி - இராணிமேரி கல்லூரி, சென்னை-4. (ஏப்ரல் 1992)