பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வேரில் பழுத்த பலா

இன்னும் செளரிராஜன் வராததைக் கண்டு கதவருகே வந்து மிஸ்டர் செளரி என்றான். அவர் நிதானமாக வந்து உட்கார்ந்தார். "அன்னத்தை ஷிப்ட் செய்யுற ஆர்டர் என்னாச்சு?" "இப்போ அந்த காண்டிராக்ட் பயல் கலாட்டா செய்யும் போது, வேண்டாமுன்னு பாக்கறேன், ஸார்."

'இப்போதான் வேணும். நேற்று திறமையைப் பற்றிப் பேசுனிங்க. எபிஷியன்ஸியை வருவித்துக் கொள்ளலாம். ஆனால்லாயல்ட்டி விசுவாசம்ரத்தத்தோடயே வாரது அன்னம் உடம்புல, நல்ல ரத்தம் ஓடுது. ஆபீஸ் சகாக்களைப் பற்றி அப்பாவித் தனமாய் சொல்லாம். ஆனால் அடாவடியாய் சொல்ல மாட்டாள்.'

"அப்புறம் உங்க இஷ்டம். அவளுக்கு மெமோ கொடுத்தது உங்களுக்கு இப்போ எவ்வளவு சாதகமாய் போயிட்டு என்கிறதை நினைச்சுப் பாருங்க"

"இதோ, அவளோட பெர்சனல் பைல். படியுங்க. நான், நீங்க நினைக்கிற மாதிரி. அவ்வளவு மட்டமானவன் இல்லே."

செளாரிராஜன், அன்னத்திற்குக் கொடுக்கப்பட்ட மெமோவைப் படித்தார். ரகசியக் கடிதத்தைப் படித்தபோது, சரவணன் எப்படித் துடித்தானோ. அப்படித் துடித்தார். மெமோவில், சரவணன் கைப்பட எழுதியதைப் படித்துவிட்டுக் கத்தினார்.

"என்ன ஸார். இது அநியாயம். யூடிஸி, பெண்ணை டெஸ்பாட்ச்ல போட்டது தவறு. அவள் விரக்தில வேலை பார்க்காமல் இருந்திருக்கலாம். முதல் கடிதமே ரிஜிஸ்டர்ல போகாததை செக் செய்யாத தலைமைக் கிளார்க்கும், நிர்வாக அதிகாரியும், இதுக்கு ஒரு காரணமுன்னு எழுதியிருக்கீங்க. என்ன ஸார் இது அக்கிரமம்"

"பொறுமையாய்ப் படிங்க... நானும் ஒரு காரணமுன்னு எழுதியிருக்கேனே."

"ஸார், ரிஜிஸ்டர்ல. இதை யெல்லாமா எழுதுறது?" "நீங்க சொல்லித்தான், அன்னம் கடிதங்களை ரிஜிஸ்டர்ல அனுப்பவில்லை. இது எழுதலாமுன்னுதான் நினைச்சேன்... ரிக்கார்டாச்சேன்னு, பெருந்தன்மையாய் விட்டுட்டேன்."

"இதைவிட மெமோவை கிழித்திருக்கலாம் நீங்க." நான் கிழிப்பேன். அப்புறம் மொட்டைப் பெட்டிஷன் போகும். எதுக்கு