பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 47 ஆர்டரை நான் போட்டுடுறேன். டோண்ட் ஒர்ரி அப்புறம் அக்கெளண்டண்ட ராமச்சந்திரன் இன்னும் வர்லயா?”

"உடம்புக்குச் சுகமில்லையாம். டெலிபோன் செய்தான்." "ஐஸி. நாளைக்கு மெடிக்கல் லீவ் வரும். அப்போ கூட நான் அந்த பூரீராமச்சந்திரனை மெடிக்கல் போர்டுக்கு அனுப்பிவைத்து, அவமானப்படுத்த மாட்டேன். டெலிவரி வீட்ஸ் என்னாச்சாம்?"

"அதைப் பத்தி அவன் பேசல ஸார்." "நீங்களும் கேட்கல. ஒழியட்டும். நீங்களாவது. நான் சொன்ன புகார் லெட்டருங்களை தேடுனிங்களா?"

"இப்போ. இதோ தேடுறேன். ஸார்." "பாவம். பைல் பண்ண மறந்துட்டிங்க இல்லியா?" ஆமாம் ஸார். அவசரத்துல மறந்துட்டேன்." "இதோ பாருங்க இந்த பைல். இதுல எல்லா லெட்டருங்களும் பைலாகி இருக்கு. பீரோவுக்குப் பின்னால கிடந்தது."

"சத்தியமாய் எனக்குத் தெரியாது ஸார். வேற யாரும் பைல் செய்திருக்கலாம்."

"நான் ஒங்களைக் குறை சொல்லலியே. யாரோ வேலை மெனக்கெட்டு. பைல் பண்ணிட்டு. அப்புறம் பீரோவுக்குப் பின்னால் ஒளிச்சி வச்சிருக்காங்க."

"நான் வேணுமுன்னால் லீவ்ல போறேன். ஸார். இந்த ஆபீஸை விட்டுத் தொலையுறேன். ஸார்."

"அது ஒங்க இஷ்டம். எந்த நிறுவனத்துலயும் தனி மனிதன் முக்கியத்துவம் அதிகமாகப்படாது. ஆகாது. நிறுவனம், மனிதனை விடப் பெரிசு. இந்த ஆபீஸ், நீங்க இல்லாட்டாலும், நான் இல்லாட்டாலும், இயங்கும். அன்னம் மூலம் அக்கெளண்ட செக்ஷன் கூட அழகாய் இயங்கும்."

"போய் ஆர்டர் போடுறேன். ஸார்." "வேண்டாம். நான் போட்டுக்கிறேன். நீங்க வேணுமுன்னால் லீவ் லெட்டர் எழுதுங்க. இல்லன்னா. வேற வேலையைக் கவனியுங்க.

ஓ.கே. நீங்க போகலாம். செளமி நாராயணன் புண்ணியத்துல நான் பிஸ்ஸி."

"நல்லதுக்கே காலமில்ல ஸார்."