பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வேரில் பழுத்த பலா

"அதனாலதான் நீங்க இங்கே இருக்கிறீங்க."

செளரிராஜன் அசந்து போனார். இவ்வளவு ஊழல் குற்றச் சாட்டிலும், கல்லு மாதிரி இருக்கான். எல்லோரையும் கைக்குள் போட வேண்டிய சமயத்தில் கூட கைவிடுகிறான். ஒருவேளை, பைக்குள் போடாதவன் எவரையும் கைக்குள் போடவேண்டிய அவசியம் இல்லையோ?"

செளரி, அவனுக்கு முகம் மறைத்து, எழுந்து அப்புறம் போய் விட்டார். உமா வந்தாள்.

"ஸார். எதுவும் டிக்டேஷன்."

"ஆமா. உட்காருங்க."

சரவணன் டிக்டேட் செய்தான். அன்னத்தை, கணக்கு பிரிவில் இரண்டாவது பொறுப்பிலும், அதைக் கவனித்து வரும் சந்தானத்தை, டெஸ்பாட்ச்சிலும் மாற்றும் ஆர்டரைச் சொன்னான். மூன்றே மூன்று வரிகள்தான்.

"ஸார், சாயங்காலமா எனக்கு வேலை இருக்குதா? இப்பவே சொல்லிட்டிங்கன்ன்ா, எங்க அண்ணாவுக்கு போன்ல சொல்லி, ஸ்கூட்டர்ல வரும்படி சொல்லிடுவேன்."

"நோ, தேங்க்ஸ்."

உமாவுக்கு சூடேறியது. அவனை உஷ்ணமாய்ப் பார்த்தாள். அடிக்கப்போவது போல் பார்த்தாள். அது முடியாததால், வெளியேறிவிட்டாள். "அன்னம் என்னைவிட உசத்தியா?"

நேரம், சரவணனுக்கு நிமிடங்கள் இல்லாமலும், செளரி, பத்மா, உமா வகையறாக்களுக்கு, வினாடி வினாடியாகவும் ஒடிக் கொண்டிருந்தது. கப்சிப் அமைதி. கலகலப்பான பேச்சில்லை. சிறிது நேரத்தில், உமா வந்து டைப் அடித்ததில் கையெழுத்து வாங்கினாள். பிறகு ஒரு காகிதத்தை நீட்டி "இவர் உங்களை பார்க்கணுமாம்" என்றாள். கண்ணனாம். சவுண்ட் ஸ்டேஷனரி கம்பெனியாம். சரவணனுக்கு நினைவுக்கு வந்தது. இந்தக் கம்பெனிக்காரன் கம்பெனியைத்தான் சிபாரிசு செய்திருக்கிறான். எதற்காக வந்தார்? எதற்கு வந்தாலும், பார்க்காமல் அனுப்புவது நியாயமில்லை. உமாவிடம் வெயிட் பண்ணச் சொல்லுங்கள் என்று சொல்ல நினைத்தான். அவளே உம் என்று இருக்கும்போது, அவன் பேச விரும்பவில்லை. அவள் நீட்டிய காகிதத்தில் "பிளீஸ் காத்திருக்கவும். அழைக்கிறேன்" என்று எழுதி அவளிடம் நீட்டினான். அவளும், கன்னத்தை உப்பியபடி போய்விட்டாள்.