பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 49

ரிஜிஸ்டர்களில் கண்ணைவிட்ட சரவணன், கடிகாரத்தைப் பார்த்தபோது, அரை மணி நேரமாயிருந்தது. அடேடே. இவ்வளவு நேரமாயா ஒருத்தரைக் காக்க வைக்கிறது? பெல் அடித்தான். கண்ணன் வந்தார். கைகூப்பி வந்தார்.

“வணக்கம் லார்"

"வணக்கம் உட்காருங்க.." "விஷயத்தைக் கேள்விப்பட்டேன். செளமி நாராயணன் எப்போமே இப்படித்தான். ஒருத்தரை சப்ளை அண்ட் சர்வீஸ்ல அடிக்க முடியாட்டால், ஆள்வெச்சுக்கூட அடிப்பான்."

"நீங்க எதுக்காக வந்தீங்க?" "என்னைப் பத்தியோ, என் கம்பெனியைப் பத்தியோ ஒங்களுக்கு தெரியாது. அப்படி இருந்தும் சிபாரிசு செய்திருக்கீங்க. அதனால செளமி அனுப்புன புகார் விஷயமாய் என்னோட உதவி தேவையான்னு கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தேன்... எனக்கும் டில்லில செல்வாக்கான ஆட்கள் இருக்காங்க."

"இருக்கட்டும். நல்லாவே இருக்கட்டும். நாங்க, ஒங்களை சிபாரிசு செய்திருக்கதும், அவர் புகார் எழுதியிருக்கார்னும் ஒங்களுக்கு எப்படித் தெரியும்?. மழுப்பாதீங்க. நீங்க சொன்னால் நான் ஆபீஸை சுத்தம் செய்ய உதவியாய் இருக்கும்."

தகப்பன், தன் பிள்ளையைப் பார்ப்பதுபோல் பார்த்த அந்த ஐம்பது வயதுக் கண்ணன், திடீரென்று எழுந்து, அவனைத் தகப்பன் சாமியாய் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டார்.

"மன்னிக்கணும். யு ஆர் கிரேட் ஸோல். வாறேன். ஸார்." கண்ணன் போய்விட்டார். அவர் போவது வரைக்கும் காத்திருக்க முடியாமல், சிறிது நேரத்தில் உமா வந்து, டைப் அடித்ததில் கையெழுத்து வாங்கினாள். அப்போது ஒரு உருவம், எட்டி எட்டிப் பார்த்தது. சரவணன், யெஸ்." என்றதும், அது உள்ளே வந்தது. சந்தானம். டெஸ்பாட்ச் செக்ஷன் போகிற அட்ஹாக் கிளார்க், புடலங்காய் உடம்பு. சோளத்தட்டை வளர்த்தி.

“ஸார். ஸார். இந்த ஆபீஸ் பாரதப் போர்ல. நான் அரவானாய் ஆயிடப்படாது ஸார்."

சரவணன், அவனை சிடுசிடுப்பாய்ப் பார்த்தான்.

"எப்படியோ. நாலு வருஷமாய் ஆபீஸருங்க கையைக் காலைப் பிடிச்சு, தாக்குப் பிடிக்கேன். அய்யா என்னை அனுப்பிடப் படாது."