பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வேரில் பழுத்த பலா

"ஒங்களை நான் எதுக்கு அனுப்பணும்?" " ஏஓ சொல்றார். வீட்டுக்குப் போறடா. என்கிறார். ஆனால், வேலை போயிட்டால். எனக்கு வீடே கிடையாது எங்கே போறது? இதை நம்பிக் கல்யாணம் வேற செய்துட்டேன் லார்"

"லுக். நான் இந்த ஆபீஸ்ல இருக்கதுவரைக்கும் என்னாலயோ, மற்ற யாராலேயோ. ஒங்க வேலைக்கு ஆபத்து வராது. ஆனால், டெஸ்பாட்ச் வேலையைத்தான் செய்யனும்."

"தேங்க் யூ ஸார். தேங்க் யூ ஸார். அது கிடைச்சாலே போதும் ஸார். இந்த ஏ.ஓ. வுக்கே இப்போதான் உங்களைப் பார்த்தால் ஆபீஸராய் தெரியுது. ஒரு நாளைக்கு உங்களுக்கு பேக்ரவுண்ட் விஷயங்களைச் சொல்றேன். அடேயப்பா. செளமி நாராயணன் இங்கே வாரதும், இவங்க அங்கே போறதும்."

"டோண்ட் டாக் நான்சென்ஸ். எனக்கு எதுவும் தெரியவேண்டாம். நீங்க நல்லா வேலை பார்க்கீங்கன்னு மட்டும் தெரியணும்."

"சத்தியமாய், கடவுள் அறிய. நீங்க அறிய." "அப்புறம். அன்னத்துக்கு அக்கெளண்ட் வேலையைச் சொல்லிக் கொடுங்க. ஒருவாரம் அவங்க ஒங்ககிட்டே அப்ரண்டீஸாய் இருக்கட்டும்."

"அப்படியே டெஸ்பாட்ச் வேலையும். இது முன்னால். முடியாதுன்னு சொல்லல. முடியுறது சிரமமுன்னு சொல்ல வந்தேன்."

"அதுவரைக்கும் சிதம்பரத்தை டெஸ்பாட்ச் வேலையை கவனிக்கச் சொல்றேன்."

"அய்யா. என்னையும்." "நான் ஒரு தடவைதான் பேசுவேன் மிஸ்டர் சொன்ன சொல்லுக்கு மாறாய் நடக்க மாட்டேன். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், ஒங்க கிட்டேதான் மொதல்ல சொல்லுவேன்."

"அப்படி ஒரு நிலைமை வார அளவுக்கு நான் நடந்துக்க மாட்டேன் ஸார்."

"பட். லூஸ்தனமாய் பேசுறதை குறைக்கணும்." "வேலை லுலாய் இருக்கதுனால. தலையும் லுலாய். வாறேன் Corr."

சரவணன் தன்னையும் மீறிச் சிரித்தான். பாவம், அவனை அட்ஹாஹ் அட்ஹாஹ்னு எல்லோரும் அதட்டி வச்சிருக்கலாம்.