பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 51

ஆனாலும், அவன் இவ்வளவு சீக்கிரமாய் அவங்களைக் காட்டிக் கொடுக்கப்படாது. எப்படியோ போறான். வேலையை ஒழுங்காய் பார்த்தால் சரிதான். -

சரவணன் மீண்டும் குறிப்பெடுக்கத் துவங்கினான். இன்றைக்கே செளமி நாராயணனின் புகார் கடிதத்திற்குப் பதில் எழுதியாக வேண்டும். இதற்கிடையில் எத்தனையோ டெலிபோன் 'கால்கள். மலைபோல குவிந்த கோப்புகள். அவன் குறிப்பெடுத்து முடித்து விட்டு, கோப்புகளையும் பார்வையிட்டு அனுப்பிய போது, அலுவலகம் முடிந்து கொண்டிருந்தது. ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

அன்னம், உள்ளே எட்டிப் பார்த்தாள். பிறகு தயங்கித் தயங்கியே வந்தாள். அவன் அறைக்கு அலுவலக நேரத்திற்குப் பிறகு போகக்கூடாது என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், இப்போதோ அவள் கண்கள் அவனை ஆச்சரியமாய்ப்பார்த்து விரிந்தன. நன்றிப் பளுவில், இமைகள் மூடிய போது, நீர் கொட்டியது. இந்த நிர்வாக அதிகாரியும், பத்மாவுந்தான் ஆபீஸ் நடத்துனர்கள் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு. அவளுக்கே ஆண்டுக் கணக்கில் அரைகுறையாய்த் தெரிந்த உண்மையை முழுமையாகக் கண்டுபிடித்து. ஒரே நாளில் எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்து விட்டான். ஸாரி. டார். அன்னத்திற்கு இவ்வளவு நாளும் தான் பட்டபாடும், அவர்கள் படுத்தியபாடும் இப்போதுதான் பெரிதாய்த் தெரிந்தது. தெரியத் தெரிய அழுகை. அழ அழ கோபம். அதுவும் பொங்கப் பொங்க, ஒரு ஆவேசம்.

சரவணன், அவளை உட்காரும்படி கையாட்டி விட்டு, தான் எழுதி வைத்திருந்த குறிப்புகளில் கண் செலுத்தினான். கால் மணி நேரத்திற்குப் பிறகு, அவளைப் பார்த்தான்.

"லாரி. காக்க வச்சுட்டேன்."

"பரவா." "இனிமேல் நீங்கதான் அக்கெளண்ட்ஸ் செக்ஷனுக்கு இன்சார்ஜ். ராமச்சந்திரன் வரமாட்டார். அண்டர்ஸ்டாண்ட்..? ஒரு வாரத்துக்குள்ளே வேலையை பிக்கப் பண்ணனும். சந்தானம், வேலை விவரத்தைச் சொல்லித் தருவார்."

"அவரு சொல்லாட்டாலும் பரவாயில்ல ஸார். தங்கமுத்து சொல்லித் தாரேன்னார்."

"யாரு ஆபீஸ் அம்பேத்காரா?"