பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வேரில் பழுத்த பலா

அன்னம், தலையாட்டினாள். லேசாய்ச் சிரித்துக் கொண்டாள். நல்லாத்தான் பெயர் வைக்கிறார். தங்கமுத்து கிட்டே சொல்லணும்: சந்தோஷப்படுவார். சரவணன், அவனிடம் அந்தப் புகார் கடிதத்தை நீட்டி முதலில் இதைப் படிங்க. அப்போதான் நான் சொல்றதைப் புரிந்துகொண்டு எழுத முடியும்" என்றான்.

அன்னம், கூச்சத்தோடு அதை வாங்கிப்படித்தாள். பிறகு, கோபத்தோடு அவனையே பார்த்தாள். என்ன அக்கிரமம். இவரைப் போய் லஞ்சம் வாங்குறதாய் அயோக்கியப் பயல் எழுதியிருக்கான். இப்போதுதான் புரியுது. பத்மாவும், உமாவும், காண்டிராக்டரோடு ரகசியம் ரகசியமாய் பேசுனதும், அக்கெளண்டன்ட் ராமச்சந்திரன் தலையைச் சொறிந்தபடி நின்னதும் இவர் கிட்ட சொல்லலாமா? இவருக்குத் தெரியாமலா இருக்கும்? பாவம். இதனாலதான் இரண்டு நாளாய் சிரித்த முகம், சீரழிஞ்சு கிடக்குதா?"

"சரி. ஆரம்பிக்கலாமா?"

"சரி ஸ்ார்."

ஏதோ சொல்லப்போன சரவணன், நாற்காலியில் சாய்ந்தான். அவளிடம், நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றுகூடச் சொல்லப் போனான். எப்படி இந்த் "டெம்போ" விவகாரத்திற்குப் பதில் எழுதுவது? இல்லை என்று சொல்ல முடியாது. உண்மையைச் சொல்வது, பாதிக் கிணறு தாண்டுவது மாதிரி. கடைசியில் இந்த சிதம்பரமும், இந்த அடைக்கலமும், இவர்களைக் காட்டியும் கொடுக்க முடியாது.

நினைத்த நேரத்தில் வரும் தேவதைகள் போல், அடைக்கலமும் சிதம்பரமும் உள்ளே வந்தார்கள். அடைக்கலம் கையில் காகிதம், சிதம்பரம், பெருமிதத்தோடு பேசினார்.

"இந்த டெம்போ விஷயத்தை, காண்டிராக்டர் பயல், இவ்வளவு அசிங்கம் பண்ணுவான்னு நினைக்கல ஸார். எல்லாம் இங்க இருக்கிற எட்டப்ப பசங்களோட வேலை ஸார். இவன் கிட்டே, இவனால ஒங்களுக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை எடுத்துச் சொன்னேன். 'உத்தியோகத்திற்கு உலை வச்சிட்டியேடா பாவின்னேன். இன்னைக்குத் தான் ஸார். இவன் கண்ணே கலங்குறதைப் பார்த்திருக்கிறேன். அப்புறம், நாங்க இரண்டு பேருமாய் திட்டம் போட்டோம். டைரக்டருக்கு அடைக்கலம் லெட்டர் எழுதிப் போட்டுட்டான். இனிமே ஒங்களால கூட, ஒண்னும் செய்ய முடியாது. இந்தாங்க ஸார் நகல்."

சரவணன் வாங்கினான். அவ்வப்போது, அவர்கள் இருவரையும் ஆச்சரியமாய்ப் பார்த்தபடி படித்தான். பிறகு, அவர்களையே பார்த்தான்.