பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 53

மனிதன் சின்னவனாய் இருக்கான். அப்புறம் விஸ்வரூபம் எடுக்க நினைத்தால், எப்படி எடுக்கான்? அப்படித்தான் இந்த அடைக்கலமும், டெம்போ யாருக்குரியது என்பதுகூட சரவணன் லாருக்குத் தெரியாது என்றும், அவர் கொடுத்த பணத்தை தான் செளமி நாராயணனிடம் கொடுக்கப் போனதாகவும், அவர் மறுத்ததாகவும், சரவணன் தன்னைத் திட்டுவான் என்று பயந்து, பணத்தை வைத்துக் கொண்டதாயும் எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய உதவி.

சிதம்பரம் ஒரு போடு போட்டார்.

"ஸார் இவன். கடைசியாய் எழுதுனதுதான் பொய். நீங்க திட்டுவீங்கன்னு பணத்தை வச்சுக்கல. பணம் என்றாலேயே, இவனுக்கு வச்சுக்கணுமுன்னுதான் தோணும். வாறேன். ஸார். இந்தாம்மா. ஒன்னைத்தான் ஆள்காட்டிப் பசங்க இருக்கிற ஆபீஸ் இது. ஸாரை கெட்டியாய்ப் பிடிச்சுக்கோ. அவரு உதறினாலும் கீழே விழப்படாது. விழுந்திட்டால், எல்லாருமாய்ச் சேர்ந்து ஒன்மேல கல்லைத் தூக்கி எறிவாங்க. வாறோம் ஸார். அடேய். ஒன்னைத்தாண்டா. அடைக்கலம். வா. ஏ.ண்டா தலையைச் சொறியுறே? இவன் இப்படித்தான் ஸார். யாருக்காவது உதவிட்டால், தலையைச் சொறிவான். அப்படியும் பார்ட்டிக்குப் புரியாவிட்டால் அப்புறம் சட்டைப் பையைச் சொறிவான். வாறோம் ஸார். ஏதோ அன்பில், மூடத்தனமாய் பேசிட்டேன். வாறேன் cmυπή..."

சரவணன், போகிறவர்களையே பார்த்தான். அன்னம், அப்படிப் பார்த்தவனையே பயபக்தியோடு பார்த்தாள்.

"ஆரம்பிக்கலாமா மேடம்?"

அவள் அதிசயித்தாள். மேடமாமே. கேட்கிறதுக்கு, எவ்வளவு நல்லா இருக்குது.

சரவணன் கோர்வையாகச் சொல்லிக் கொண்டு போனான். முனையில்லாத குண்டுசி, ஒடியும் பென்சில், ஊறும் காகிதம், ஒரு பக்கம் சில தகரத்துண்டு இல்லாத டேக், கிழிந்த கோப்புக் கவர்கள் ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியை சுவைபடச் சொன்னான். அப்போது அன்னம் கூடச் சிரித்துக் கொண்டாள். பிறகு, இதர அலுவலகங்களில் இருந்து, எழுது பொருட்கள் இடர்வதைப் பற்றி வந்த கடிதங்களைத் தேதி வாரியாகக் குறிப்பிட்டான். காண்டிராக்டர் எந்தெந்த தேதிகளில் எத்தனை நாள் எத்தனை மாத தாமதத்துடன் டெலிவரி செய்திருக்கிறார் என்பதை, டயரியைப் பார்த்துப் பார்த்துச் சொன்னான். டெம்போ விவகாரத்திற்கு, ஒரு கடிதம் இணைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டான்.