பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 55

சரவணன் அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தான். பிறகு, வாயை விசாலப்படுத்திப் பார்த்தான். அவளுக்கும் லேசாய் பெருமிதம்: அலுவலக நியாயப் போராட்டத்தில், தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது. தானும் ஒரு பொறுப்பான அபிஷியல் என்ற பெருமிதம். சரவணன், அவன் நினைப்புக்கு மேற்கொண்டு இடம் கொடுக்கவில்லை.

"சரி. போய் டிராப்ட் அடிச்சுட்டு வாங்க... ஒரு தடவை பார்த்துடுறேன். அப்புறம் நகல் பண்ணலாம்."

அன்னம், அவசர அவசரமாய் எழுந்தாள். அவன், களைப்பில் நாற்காலியில் சாய்ந்தான். டைப் சத்தம் தாலாட்டாகிவிட்டது. உழைப்பே இப்போது தூக்கமாய் உருமாறி, அவனை ஆட்கொண்டது. அன்னம் "ஸார் ஸார் என்று சொல்லிவிட்டு, பிறகு டேபிள் வெயிட்டால் மேஜையைத் தட்டிய பிறகுதான் கண் விழித்தான். கடிகாரத்தைப் பார்த்தான்; மணி இரவு எட்டு. பாவம் எவ்வளவு நேரமாய் காத்திருந்தாளோ?

"சரிம்மா. நீங்க போங்க. நான் டிராப்டை செக் பண்ணப் போறேன். நாளைக்கு ஈவினிங்ல காபி எடுத்துடலாம். ஒரு விஷயம். கடித விவரத்தை, யார் கிட்டேயும் தெரியாத்தனமாகச் சொல்லிடப்படாது. இன்றைய சினேகிதர்கள். நாளைய விரோதிகள் என்கிற நினைப்புலதான் ஆபீஸைப் பொறுத்த அளவுல பழகனும் தேங்க் யூ. ஒகே குட்நைட் அன்னம் தயங்கியபடி நின்றாள். அவன் கவனித்ததாகத் தெரியவில்லை. மெள்ள மெள்ள கால்களை நகர்த்தினாள். இந்தத் தங்கமுத்தையாவது கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி இருக்கலாம் எனக்கும் தெரியாமல் போயிட்டு.

சரவணன் டிராப்டைப் படித்தான். அசந்து போனான். ஒரிரு தப்புகளைத் தவிர, வேறு எந்தத் தப்பும் தெரியவில்லை. உமாவால் கூட இப்படி டிக்டேஷன் எடுத்து. இவ்வளவு கச்சிதமாய், டைப் அடிக்க முடியாது. நல்ல பெண். வேலையை பிக்கப் செய்துக்குவாள்.

கால்மணி நேரத்தில் திருத்தினான். அடுத்த கால்மணி நேரத்தில் புள்ளி விவரங்களை ரிஜிஸ்டர்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்தான். பின்னர் புறப்பட்டான். அறைக்கு வெளியே வந்தான். தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்த அன்னம் எழுந்தாள்.

"இன்னும் போகலியா?"

"இருட்ல தனியாப் போறதுக்குப் பயமாய்."

"சரியாப் போச்சு. வாட்ச்மேனை கொண்டு விடச் சொல்ல வேண்டியதுதானே."