பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் போதுமா?

அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றாலும், அதிகார வர்க்கத்தினரால் அடிமைகளாக நடத்தப்பட்டு உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் இழந்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை சித்தரிக்கின்ற நாவல்களுள், சு. சமுத்திரம் அவர்களின் நாவல்கள், சிறப்பிடம் பெறுகின்றன.

"சிப்ஸ் போட்டு மேல்தளம் பூசணும். அஞ்சு பெரியாள், அஞ்சு சித்தாள் வேணும். ஐந்தல்ல ஐந்தைந்து இருபத்தைந்து பேருக்கும் அதிகமாக அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்." என்ற காட்சி-விளக்கம் மூலம், கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமில்லா வேலை நிலைமைகளையும், அவர்களின் பொருளில்லா வாழ்வின் அவல நிலைமையையும் காட்டுகின்றார். கட்டிடத் தொழிலில் நாற்பது வருட அனுபவம் இருந்தாலும் கூட நோய் நொடியோடு வயதாகிப்போன தொழிலாளர்களை கழித்துவிட்டு, திடகாத்திரமான தொழிலாளர்களை எடுக்கும் நிலையை, இங்கு சுட்டிக்காட்டுகின்றார்.

"நீ அந்தாண்ட போ. போன வாரம் ஒண்ணுக்கு போற சாக்குல, ஒரு மணி நேரத்த வேஸ்ட் பண்ணுன."

பெண் கட்டிடத் தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், மேஸ்திரிகள், காண்டிராக்டர்கள் ஆகியோர்களின் காம கண்ணோட்டத்திற்கும், இரட்டை அர்த்தப் பேச்சுக்களுக்கும், மறைமுக அழைப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

"ஆமா. நீ எருது, நான் உன்மேல உட்காரப் போற காக்கா..." கட்டிடத் தொழிலாளர்கள் அன்றைய தினம் உழைத்த பின்பே அவர்களுக்குக் கால்வயிறு கஞ்சியாவது கிடைக்கும் என்ற நிலையில் உள்ளனர். எனவே அத்தொழிலாளர்களின் பகல் நேர உணவு எத்தகையது என்பது,

"வெற்றிலை சப்பாத்தியாம். கொட்டைப்பாக்கு உருளைக்கிழங்காம். உமிழ்நீர் சாம்பாராம். வாயே வயிறாம்."

முந்நூறு குடிசைகள் உள்ள பகுதியில் கூலித்தொழிலாளர்கள் வசிக்கின்றனர். ஆனால் அங்கோ, அதற்கேற்ப எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்கின்ற அவல நிலையினை சு. சமுத்திரம் அவர்களின் வருணனைத்திறம் வெளிக்காட்டுகிறது. "குழாயல்ல, கார்ப்பரேஷன் ஒரு கழிசடை என்பதற்கான அடையாளம். அருகிலேயே கக்கூஸ், அங்கே கார்ப்பரேஷன் குழாய் நீர், வெட்கப்பட்டு, நுழைய மறுத்ததுபோல் வாசனை, வெளியே ஒவ்வொருவருடைய மூக்கிலும் துழைந்து கொண்டிருந்தது. மொத்தம் முந்நூறு குடிசைகள் உள்ள் அந்தப் பகுதியில் இரண்டே இரண்டு தண்ணீர் குழாய்கள்". பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்த வேலு என்ற கட்டிடத் தொழிலாளியின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீட்டுத்தொகை கொடுக்காமல், குறைந்த தொகையைக் கொடுத்து மூடி மறைத்திட நினைக்கும் முதலாளிகளின் நயவஞ்சகத் தன்மையை எதிர்த்துப் போராடத் தயாராகிறார்கள் என்பதை "நாங்களே காண்டிராக் ரை மிரட்டி உருட்டி நஷ்ட ஈடு வாங்கித் தந்துடலாம். அது பெரிய காரியமல்ல. ஆனால் இது ஒகு முன்னுதாரண கேஸாய் இருக்கதுனால. லேபர் கோர்ட்ல போடலாமுன்னு இருக்கோம். கேஸ் தோற்றுப்போய்ட்டால் மேலும் பலமா போராடலாம். விடப்போறதில்லை." என்று பெயிண்டர் பெருமாள் என்ற பாத்திரத்தின் மூலம் போராட்டமே இதற்கு ஒரே தீர்வு என்பதை உணர்த்துகிறார்.