பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வேரில் பழுத்த பலா

"கேட்டேன் ஸார். ஆபீஸர் இருக்கும்போது. தலையே போனாலும் வெளில போகமாட்டாராம்."

"ஆபீஸர் இல்லாவிட்டால் போவாராமோ? சரி நடங்க. எங்கே தங்கியிருக்கீங்க?"

"அமிஞ்சிக்கரை. ரெண்டு பஸ் ஏறணும் ஸார்."

"ஐ ஆம் ஸாரி. நாளைக்கு தங்கமுத்தை வச்சு டைப் அடிக்கிறேன். உம். நடங்க."

சரவணன் யோசித்தான். அன்றைக்கும் ஸ்கூட்டர் கொண்டு வந்திருந்தான். அவளை எப்படி ஏற்றிக் கொண்டு.? இரண்டு பஸ்ல போகனுமாமே. இந்த இருட்டில் எப்படித் தனியாய் போவாள்? அந்தச் சமயத்தில், வாட்ச்மேனை விட்டுவிட்டு வரச் சொல்லலாம் என்றும், அவர் திரும்புவது வரைக்கும், தானே, அலுவலகக் காவலாளியாக இருக்கலாம் என்றும் அவனுக்குத் தோன்றவில்லை.

இருவரும் வெளியே வந்தார்கள். அவன் ஸ்கூட்டரை உதைத்தான். அவள் மன்துக்குள் உதைத்தாள். வாட்ச்மேன் வந்து, ஸ்கூட்டரைப் பிடிப்பதுபோல் நின்றார்.

"ஸ்ார். பஸ்ல."

"நானும் யோசித்தேன். ஆபத்துக்குத் தோஷமில்லை. உம். ஏறுங்கோ..."

அன்னம் பயந்து போனாள். ஸ்கூட்டரில் இதுவரை ஏறியதில்லை. எப்படி. எப்படி. சரவணன் ஆற்றுப் படுத்தினான். அன்னம் இருக்கையில் கண் பதித்தாள். பிறகு ஏறிக் கொண்டாள். அவன் சிரித்தபடி சொன்னான்:

"லேடீஸ் ரெண்டு காலையும் பரப்பி உட்காரப்படாது. ஒரு பக்கமாய் உட்காருங்க. ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப். காதலர்கள் ஸ்கூட்டர்ல ஜோடியாய் போனதைப் பார்த்ததில்லையா? ஒ. ஐ அம். லாரி. அபத்தமாய் பேசுறேன். நீங்க என்னோட சகா., ஒங்க பாதுகாப்புல எனக்கு அக்கறை உண்டு. உம். தப்பாய் நினைக்காதீங்க."

அன்னம் பயந்து பயந்து, ஸ்கூட்டரின் பின்னிருக்கையில் இறங்கி ஏறினாள். அது நகர்ந்தபோது, அவளும் பக்கவாட்டிலும், பின்புறமாகவும் நகர்ந்து போனாள். பியூன் சிதம்பரம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது இதைத்தான் சொல்லியிருப்பாரோ. 'ஸா ரை, கெட்டியாய் பிடிச்சுக்கோன்னு சொன்னாரே.