பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 57

அவளுக்குச் சிரிப்பு வந்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அவமானமும் வந்தது. இது முறையா என்ற சந்தேகமும் வந்தது. இந்த எல்லா உணர்வுகளையும், ஒரு உணர்வு அடக்கியது. பயம். விழப்படாதே என்ற பயம். ஸ்கூட்டர், ஐம்பது கிலோ மீட்டரில் பாய்ந்தது.

அன்னம், கீழே விழாமல் இருப்பதற்காக, அவனைப் பிடித்துக் கொண்டாள். அவனே அசைய முடியாதபடி பலமாய் பிடித்துக் கொண்டாள்.

6

ஒரு மாதம், வந்தது தெரியாமல் போனது.

அன்னம் வேலையில் பாதி தேறிவிட்டாள் இப்போது, அவள் முகத்தில் ஒரு மினுக்கம். பார்வையில் ஒரு நம்பிக்கை நடையில் ஒரு துள்ளல். தங்கமுத்துவும், சந்தானமும் போட்டி போட்டு, அவளுக்கு வேலை விவரங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். அக்கெளண்டன்ட் ராமச்சந்திரன் போனவர் போனவர்தான். 'அம்மாதான் அந்தப் பிரிவுக்கு இன்சார்ஜ் நிர்வாக அதிகாரி, சந்தானத்தைப் பார்த்துக் கருவினார். "அடே உருப்படுவியாடா? பகவானுக்கே அடுக்குமாடா? பன்னாடப் பயலே. என்கிட்டே ஒரு காலத்துல குழைஞ்ச பயல். இப்போ பேசுறத்துக்கு யோசிக்கிறியா? இரு இருடா. இரு."

தங்கமுத்துவும், அன்னமும் ஒருவருக்கொருவர் மணிக்கணக்கில் அன்னியோன்யமாய் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து பத்மாவும், உமாவும் கண்ணடித்துக் கொண்டார்கள். சரவணனும், நிர்வாக அதிகாரியை மட்டும் கூப்பிடாமல், செக்ஷன்-இன்சார்ஜ்களைக் கூப்பிட்டு, கோப்புகளை விவாதித்தான். ஒருதடவை, அன்னம் வந்து, 'ஸார். செளமி நாராயணன் குண்டுசிக்கு அதிக ரேட் போட்டிருக்கார். ஆபீஸ்ல குண்டுசி டிமாண்ட் எண்ணிக்கையை குறைச்சு, சவுண்ட் கம்பெனி அதிகமாய் ரேட் போட்ட பிளாட்டிங் பேப்பர் எண்ணிக்கையை கூட்டியிருக்காங்க. போன பைனான்ஷியல் இயர் கணக்குப்படிப் பார்த்தால், காண்டிராக்டர் கண்ணன் கொடுத்ததுதான் மினிமம் ரேட். என்றாள். சரவணன், பெருமை பிடிபடாமல், அவளைப் பார்த்தான். ஒர்க் அவுட் செய்யுங்க என்றான். அன்னம், ஒர்க் அவுட் செய்து, ஸ்டாண்டர்ட் கம்பெனியின் ரேட்டுதான். மினிமம் கொட்டேஷனாகி, டில்லிக்குப் போய்விட்டது.