பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வேரில் பழுத்த பலா

சரவணனுக்கு இன்னும் ஒரு எளிச்சல் காண்டிராக்டர் செளமி, அவன் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்குச் சொந்தக்காரனாம். அவரிடம் ஊதியிருக்கிறான். வீட்டுக்காரர். இப்போது அவனைக் காலிசெய்யச் சொல்லுகிறார். சீ. ஒருத்தன் இவ்வளவு சின்னத்தனமாவா நடக்குறது? முடியாதுன்னு சொல்லியாச்சு என்ன பண்ணுறானோ பண்ணட்டும்.

"மே ஐ கம் இன்" என்ற குரல் கேட்டு, சரவணன் நிமிர்ந்தான். ராமசாமி ஐ.பி.எஸ். அதிகாரி. மாநில அரசில், கமர்ஷியல் கிரைமை பார்த்துக் கொள்பவன். அவனுடைய காலேஜ்மேட். முசெளரியில் டிரெயினிங் மேட் எல்லாவற்றையும்விட இன்டிமேட்

"அடேடே. வாடா வா!'

நான் ஒன் ஆபீஸுக்கு நாலு தடவை வந்தாச்சு. நீ ஒரு தடவையாவது வந்திருக்கியாடா?"

"ஒனக்கென்னப்பா. நீ ஐ.பி.எஸ் காருங்க ஒனக்காக காத்திருக்கும். நான் அப்படி வரமுடியுமா? எனக்கு டெம்போ கூட."

"என்ன உளறுறே?"

"என்ன சாப்பிடுறே?"

"கூலா கொடு."

ராமசாமி ஐ.பி.எஸ். ஒப்பித்தான்.

"வீட்ல தொல்லை தாங்க முடியலப்பா.. அதனாலதான் இப்போ வந்தேன். சீக்கிரமாய் கல்யாணம் பண்ணிக்கோன்னு அப்பா பிரஸ் பண்றார். நான் கல்யாணம் பண்ணுறதைப் பார்த்துட்டுதான் தாத்தா சாகப் போறாராம். படுத்த படுக்கையாய் கிடக்காராம். ஏதாவது ஒரு நல்ல பெண்ணாய் இருந்தால் சொல்லுடா."

"என்னடா நீ. ஐ.பி.எஸ். அதிகாரி ஒனக்குப் பெண் கொடுக்க, எத்தனையோ ரவுடிங்க கியூவிலே நிற்பாங்க."

"அதனாலதான் ஒன்கிட்டே வந்தேன். டேய். சீரியஸாத்தான் கேட்டேன்."

"நீ ஒருத்தன். நான் என் தங்கச்சிக்கே மாப்பிள்ளை கிடைக்காமல் திண்டாடுறேன். ஒன்று செய்யலாம். நீ அவளுக்கு மாப்பிள்ளை பாரு. நான் ஒனக்குப் பெண் பார்க்கறேன்."

ராமசாமி சரவணனை, பெண்ணைப் பார்ப்பது போல் பார்த்தான். பாவாடை - தாவணியில் பார்த்த வசந்தா, வாசல் பக்கம் நிற்பதுபோல், தலையை நீட்டினான். எப்படிக் கேட்பது? இதில் என்ன ஒளிவு மறைவு.?