பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 59

"டேய். ஒன் தங்கையை. எனக்குத் தாறதுல ஆட்சேபம் இல்லையே?"

"விளையாடுறியாடா?" "இதுல என்னடா விளையாட்டு. நீ என் நண்பன். சீனியர் கிளாஸ் ஒன் ஆபீஸர். ஒன்னோட தங்கையை கட்டித் தந்தால், சந்தோஷப்படுவேன். எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.டா. நீயாவது லேசாய் சிகரெட் பிடிப்பே. நான் அதுகூட பிடிக்கமாட்டேன். ஏண்டா யோசிக்கே?"

"யோசிக்க வேண்டிய விஷயம்." "சரி உனக்கு இஷ்டமில்லன்னா..." "இல்லடா. சந்தோஷ அதிர்ச்சியை என்னால தாங்கிக்க முடியல. பெரிய இடத்துல நீ செய்துகிட்டால், ஒனக்கு நல்லது பாரு'

"லாக்கப்புல போட்டுடுவேன். ஒன்னைவிட எனக்கு. எந்த அயோக்கியண்டா பெரிய இடம்? அப்பாவுக்கு. லெட்டர் போடட்டுமா?"

"வசந்தாவை இப்ப ஒரு தடவை பார்த்துக்கோ." "நீயே பெண் மாதிரிதான் இருக்கே ஒன்னைப் பார்த்தது போதும். நல்லவேளை. நீ என் நண்பன் மட்டுமில்லாமல், ஜாதிக்காரனாய் வேற போயிட்ட."

"என்றைக்கு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், அரசியல்வாதி, எழுத்தாளன். கவிஞன், பத்திரிகை ஆசிரியர்ன்னு ஒருவனுக்குப் பட்டம் வருதோ, அப்போ அவன் தன்னோட ஜாதிப் பட்டத்தைத் துறந்துடனும். நீ ஐ.பி.எஸ். தானே?"

"எவண்டா இவன். எனக்கு ஜாதி கிடையாது. ஆனால் எங்க தாத்தா, கல்யாணம் முடிஞ்சவுடனே கண்ணை மூடப்போறதாய் உறுதி கொடுத்திருக்கார். நான் வேற ஜாதில கட்டி, அவர் உயிரு போக முடியாமல் இருந்தார்னால், யாருடா அவஸ்தைப் படுறது?"

சரவணன் மனம்விட்டுச் சிரித்தான். இப்படிச் சிரித்து எவ்வளவோ நாளாகிவிட் இதற்குள் அடைக்கலம், கூல் டிரிங்ஸ்ஸோடும் ஒரு காகித உறையோடும் வந்தான். ராமசாமி, குடித்துக் கொண்டிருந்தபோது, சரவணன் படித்துக் கொண்டிருந்தான்.

பழையபடியும் பாழாப்போன செளமி நாராயணனோட இரண்டாவது புகார் முன்பு, கான்டிராக்டர் கண்ணன் பெயர் கொண்ட காகிதத்துண்டில், தயவு செய்து. காத்திருக்கவும் என்று சரவணன்