பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வேரில் பழுத்த பலா

எழுதியிருந்தானே. அதன் போட்டோஸ்டெட் நகல். புகார் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. செளமி, தனது முந்திய ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, அதை வைத்திருந்தான். தற்செயலாய் - மனித நாகரிகம் கருதி எழுதப்பட்டதை எப்படி மாற்றி விட்டான். அவனுக்கு யார் கொடுத்தது.? என்ன சந்தேகம்? உமாதான் கொடுத்திருப்பாள். கேட்டால், அய்யோ. அம்மா. கண்ணன் சூதுவாது இல்லாம கீழே போட்டிருப்பார். எந்தப் பொறுக்கியோ எடுத்திருப்பான் என்று இந்தப் பெண் பொறுக்கி ஒப்பாரி போடுவாள். ஏற்கனவே பல அந்தரங்க சமாச்சாரங்கள் கொண்ட கோப்புக்கள் தனக்கு வரவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவள்.

போகட்டும். இன்றைக்குள்ளே தலைமையிடத்திற்கு, காமெண்ட்ஸ் கொடுக்கணுமாம். ஆபீஸ் எட்டப்பர்களைப் பற்றி எழுதியதற்கு, இன்னும் பதிலே இல்லை. அங்கே மட்டும் எட்டப்பன், எட்டப்பச்சி. இல்லாமலா இருப்பார்கள்? மச்சானாகப் போகிற இந்த ராமசாமியிடம் சொல்லலாமா? கமர்ஷியல் கிரைமை கவனிக்கிறவன். செளமி நாராயணன் ஆபீஸ்ை ரெய்டு செய்தால், அவன் ஒழிஞ்சான். ஒருவேளை இங்கே உள்ளவங்க எழுதிக் கொடுத்த விவரங்களும் கிடைக்கலாம். வேண்டாம். வேண்டாம். இதுவும் ஒரு வகை அதிகார துஷ்பிரயோகம்தான். நல்லதுக்கும் கூட, இன்னொருத்தன் அதிகாரத்தை, எனக்காகப் பயன்படுத்தக் கூடாது.

குளிர்பானத்தைக் குடித்து முடித்த ராமசாமி, அவனை உலுக்கினான். "நீ ஏண்டா. குடிக்கல?"

சரவணன், கூல்டிரிங்கை குடித்தபடியே "மச்சானாகப் போறே, சார் போட்டுப் பேசுடா" என்றான். சிரிக்கத்தான் போனான். சிரிப்பு வரவில்லை. ராமசாமி, போலீஸ் அதிகாரியாய் இருந்தாலும், அப்போது கல்யாண மாப்பிள்ளையாகவே ஆகிவிட்டதால், சரவணனின் மாற்றத்தைக் கவனிக்க வில்லை.

"அப்புறம் வாறேண்டா. கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்?"

"அப்பாவுக்கு எழுது. எந்த தேதியும் எனக்கு நல்ல தேதிதான்."

ராமசாமி போய்விட்டான். சரவணன், தங்கைக்குக் கிடைத்த மாப்பிள்ளையை நினைத்து மகிழப் போனான். உடனே, போட்டோஸ்டெட் நகலும், கான்டிராக்டர் கடிதமும், அந்த மகிழ்ச்சியைக் குலைத்தன. பாஸ்டர்ட். எப்பவோ ஒரு தடவை வருகிற மகிழ்ச்சியைக் கூட. அனுபவிக்க முடியாமல் கெடுத்திட்டானே.

சரவணனால் இருக்க முடியவில்லை. உமா வந்தால், அவளை அறைந்தாலும் அறைந்துவிடாலாம். என்ற அச்சம் ஏற்பட்டது.