பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வேரில் பழுத்த பலா

அவனோ, எந்தவித சலனத்தையும் காட்டிக் கொள்ளாமல், தன் அறைக்குப் போனான். வசந்தா தேறினாள். ஒருவேளை பார்த்திருக்கமாட்டானோ? பார்த்திருந்தால். இப்படி யாரும் போகமாட்டாங்களே. அதுவும் அண்ணன்.

பைய பைய நடந்து, அண்ணனின் அறையை நோட்டம் விட்டாள். அவன், தலையில் இரு கை வைத்து, கட்டிலில் கால் பரப்பிக் கிடந்தான். வசந்தாவால் நிற்க முடியவில்லை. இதயம் வெடித்து வெளியே வரப் போவது போலிருந்தது. ஆனாலும், அவன் பேசாமல் இருந்தான். அவளுக்கு ஒரு நிம்மதி.

அரை மணி நேரம் ஆனது. முன்னறைக்கு வந்தவனை, அப்போதுதான் பார்ப்பது போல், அண்ணி ஆச்சரியப்பட்டு நின்றாள். அம்மா, இன்னும் எழவில்லை. வசந்தா, எதுவுமே நடக்காதது போல் "என்னண்ணா. சீக்கிரமாய் வந்துட்டே? உடம்புக்கு எதுவும்." என்றாள்.

அவனும், எதுவும் நடக்காததுபேரில் பதிலளித்தான்: ஒனக்காகத்தான் வந்தேன். நீ-புத்தகமும் கையுமாய் இருந்ததுல அண்ணனுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? என் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நீ நடந்துட்டே என்க்கு. இப்போ சந்தோஷம் தலைவரைக்கும் வந்துட்டு. உம். நல்ல புடவை ஏதும் இருக்குதா? கடையில போய் வாங்கணுமா?"

"எதுக்குண்ணா?" 'ஒனக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒரு களியத்தைச் செய்யப் போறேன். கழுத்துல ஒரு செயின் கூட உண்டுல்ல? எடுத்துப் போட்டுக்கோ. அண்ணி, இந்தங்க சாவி, பீரோவைத் திறந்தால், நூறு ரூபாய் தெரியும். எடுங்கோ. அண்ணன் ரொம்ப ரொம்ப ஏழைம்மா. மீதிப் பணத்தை அடுத்த மாசம்

"எங்கண்ணா?"

"எங்கண்ணான்னு சொல்லாதே. என்ன அண்ணான்னு கேளு. ஆமாம். நான் என்ன அண்ணன்? உம். இந்தப் புடவையே நல்லாத்தான் இருக்குது. புறப்படு."

"என்னப்பா இதெல்லாம்?"

"சொல்றேன் அண்ணி. இவளை. அதோ எதிர் வீட்ல. இரண்டாவது மாடி வீடு இருக்கு பாருங்க. அங்கே, ஒரு பொறுக்கி இருக்கான். அவன் கிட்ட ஒப்படைச்சுட்டு வந்துடுறேன். அடேயப்பா.