பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI

சு. சமுத்திரம், தம் நாவல்களில் தொழிலாளர்களின் இன்னல்களுக்கெல்லாம் தீர்வாக போராட்டங்களை கருவியாக்கி, திரண்டெழும் மக்கள் சக்தியின் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார். நாவல்களில், சமுதாயத்தின் அவலநிலையை சித்தரிப்பது மட்டும் படைப்பாகாது. அதற்கான காரணங்களையும், நிரந்தர தீர்வுகளையும் தருவதே ஒரு ஒப்பற்ற எழுத்தாளனின் கடமையாகும். அவ்வகையில், சு. சமுத்திரம் அவர்கள், சிக்கலுக்கான தீர்வை கூறுவதோடு, நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றார்.

ப. தேன்மொழி - செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை - 32. (டிசம்பர் 2001)

வாசகக் கடிதங்களில் சில... (1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெட்டி இதழில் வெளியானவை)

பொய், பித்தலாட்டங்களிடையே உண்மை எதிர்நீச்சல் போட்டு வெற்றி காணப் புறப்படுவதாக, சரவணனை மனம் தளர்ந்து விடாமல் கதையை முடித்திருந்த விதம் நிறைவாக இருந்தது.

- எஸ். கணேசன், திருநெல்வேலி - 627 001. சமுத்திரம் பொங்கியதால், சமுதாய சகதிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

- வடுகை. மணிசேகரன், ப. வடுகபாளையம். சு. சமுத்திரம் அவர்களின் "வேரில் பழுத்த பலா", சமுதாயச் சீர்கேடுகளையும், நாகரிகமான காதலையும், அழகாக, மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது

- எஸ். சுப்பிரமணியன், சென்னை - 12. சமுதாயப் பிரக்ஞை உள்ள இதுமாதிரி கதைகள் மேன்மேலும் வந்தால்தான் நம் இளைஞர்கள், "இந்த உலகம் - உலகமல்ல. ஒரு கோலிக்குண்டைப்போல உங்கள் உள்ளங்கையிலே நீங்கள் உருட்டி விளையாடுகிற காலம் வரும்" என்ற தங்களது கனவை நனவாக்குவார்கள்.

- ஆர். நஜீர் அகமத், கோவில்பட்டி, பெண்களின் சதைகளைக் கருவாகக் கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில் சு. சமுத்திரம் ஒரு வித்தியாசமான எழுத்தாளர்தான். அவரது 'வேரில் பழுத்த பலா எங்கள் உள்ளத்தின் உள்ளுணர்வுகளைத் தொட்டது.

- பூரீ ரங்கம் வைத்தியநாதன், கி.பி. செல்வராசு, சென்னை -34. வருஷத்திற்கு இரண்டு நாவல்களாவது வேரில் பழுத்த பலா மாதிரி கொடுங்கள். ஒரு சராசரி நேர்மையான மனிதனுக்கு ஏற்படும் சோதனைகளை சு. சமுத்திரம் அழகாக, அருமையாக விளக்கி இருக்கிறார்.

- கே. குமார், சென்னை - 21.