பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வேரில் பழுத்த பலா

சரவணன் கத்தினான். "அந்தக் கதை வேண்டாம். நானே கொண்டு விடுறேன். எழுந்திரு."

"அண்ணி. அண்ணி. ஒங்க பேச்சைக் கேளாதது தப்புத்தான். தப்பே தான்."

'துடிக்காதப்பா. ஒன்னோட நேர்மையும், ஒங்கண்ணாவோட நியாயமும். இந்தக் குடும்பத்து மானத்தை காப்பாற்றிட்டு. இல்லன்னா, இப்போ வாரவனா நீ.? பெண்களுக்கு சபலம் வரத்தான் செய்யும். அப்புறம், ஒரு நாளைக்கு, அப்படி வரக்கூடாதுன்னு ஒருத்தி நினைச்சிட்டால், அப்புறம் அந்த இழவு வரவே வராது. வசந்தாவை நாம இப்போ நம்பலாம்."

சரவணன், அண்ணியை ஒரு மாதிரி பார்த்தான். அவள், கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். பிறகு அவன், விரக்தியின் விளிம்பில் நின்று பேசினான்.

"எப்படியோ போய்த் தொலையட்டும். இந்த மாதிரி அம்மா இருக்கையில. இவள், இன்னும் கெட்டுப் போகாமல் இருந்ததே பெரிய காரியம். இவள் கெட்ட கேட்டுக்கு ஒரு ஐ.பி.எஸ். ஆபீஸர். அதாவது சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் இல்ல. அதுக்கும் மேல், மேலான போலீஸ் அதிகாரி. கல்யாணம் பேசிட்டு வாரேன் அண்ணி"

"வயசானவன் எதுக்குப்பா."

"அய்யோ. அய்யோ. வயசானவன் இல்ல. என் வயசுதான். ஆனால் பெரிய போலீஸ் அதிகாரி. வேற யாருமில்ல. முன்னால, நம்ம வீட்டுக்குக் கூட வந்திருக்கான். ராமசாமின்னு பேரு."

"அடடே. ராமசாமியா? எங்க அம்மா வழில, அவன் சொந்தம்." "இன்னைக்கு. அவனே வந்து கேட்டான். வலியக் கேட்டான். சரின்னு தலையாட்டிட்டு வாரேன். இவள் என்னடான்னா எதிர்வீட்டுப் பயல்கிட்ட தலையை ஆட்டுறாள்."

"சரி விடு. அதையே சொல்லிச் சொல்லிக் காட்டாதே. எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்?"

"அதை இப்போவா பேசுறது? இவள் தங்கைன்னா, அவன் எனக்குத் தம்பி, தங்கைக்குப் பிரியம் காட்டறதுல, தம்பிக்குத் துரோகம் பண்ணிடப்படாதேன்னு பாக்கேன்."

"சின்னப் பிள்ளை மாதிரி உளறாதேப்பா. ஆறு, குளிக்கிற