பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 67

இடத்துலதான் சுத்தமாய் இருக்கணும். ஒரு பெண்ணு குடும்பத்துக்கு வந்த பிறகுதான், புருஷன் அவளைக் கவனிக்கணும்."

அண்ணனை, மெளனமாகப் பார்த்த வசந்தா சொல்ல வேண்டாம். சொல்ல வேண்டாம். அண்ணா எனக்கு. அந்த ஐ.பி.எஸ். ஆபீஸர்தான் வேணும் என்று சொல்ல நினைத்தாள். எப்படிச் சொல்வது?

எப்படியோ, வீடு அமைதிப்பட்டது. அவர்கள் அமைதிப் படாமலே, அது அமைதிப் பட்டது. சரவணன், தனது அறைக்குள் போனான். அயர்ந்து படுத்தான். அப்படியே தூங்கிவிட்டான். துக்க பாரம் விழிகளை அழுத்த உழைப்புப் பாரம் கட்டிலை அழுத்த, அரை மயக்கமானவன் போல் கிடந்தான். இரவில், அண்ணி சாதத்தட்டோடு வந்தாள். அங்கேயே தூக்கக் கலக்கத்தோடு சாப்பிட்டுவிட்டு, துக்கக் கலக்கத்தோடு ப்டுத்துக் கொண்டான்.

மறுநாள், காலையில் கண்விழித்து, அப்படியே உட்கார்ந்திருந்தான். அலுவலகம் போகிற நேரம்கூட வந்து விட்டது. அண்ணி வந்தாள்.

"ஏதோ. கோர்ட் நோட்டிஸாம். நேற்றே வந்தது. ஒன்கிட்ட கொடுக்க மனசு வரல."

சரவணன் படித்தான். உடம்பை நெளித்தான். அவனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொண்ட ஒருவன், அதிலும் அதிகாரி நண்பன், அந்த வீட்டிலுள்ள நாற்காலி மேஜைகளையும் பீரோவையும், ஸோபா ஸெட்டையும், ஒரு கம்பெனியில் மாதத் தவைைணயில் வாங்கிக் கொடுத்திருந்தான். சரவணனும் மாதாமாதம் அந்த நண்பனிடமே தவணைப் பணத்தைக் கட்டிவிடும்படி ரூபாய் கொடுத்தான். அவன் கட்டியிருப்பான் என்றுதான் நினைத்தான். இப்போது, அந்தக் கம்பெனி திவாலாகி, நீதிமன்ற ரிஸிவர் எடுத்திருக்கிறாராம். சரவணன் பணமே கட்டவில்லை என்று நோட்டீஸ் வந்திருக்கிறது. பணத்தை வாங்கியவன் மாற்றலாகி, இப்போது போபாலில் இருக்கிறான். மனித நாகரிகம் கருதி, நம்பிக்கையின் அடிப்படையில், அவனிடம் ரசீது கேட்காதது எவ்வளவு தப்பாய்ப் போயிற்று? என்ன உலகம்? என்ன மனிதர்கள்? இனிமேல் நட்புக்கே ரசீது வாங்க வேண்டுமோ?

அண்ணி, அன்போடு கேட்டாள். "என்னப்பா. முகம் ஒரு மாதிரி ஆகுது?" "எதைத் தாங்கினாலும் துரோகத்தைத் தாங்க முடியல அண்ணி. நம் வீட்ல இப்போ இருக்கிற சாமான்களை ஒரு நல்லவன் தவணையில் வாங்கிக் கொடுத்தான். அவன் கிட்டயே, மாதாமாதம் பணத்தைக் கொடுத்தேன். உடனே கெட்டவனாய் ஆயிட்டான். போகிற போக்கைப்