பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வேரில் பழுத்த பலா

"நீங்க எதையும் சொல்ல வேண்டாம். போன வாரந்தான் எனக்கே விஷயம் தெரியும். இந்தாங்க ரூபாய்."

"வேண்டாம் ஸார். வாறேன். ஸார்." "இப்படி கூழைக்கும்பிடு போட்டுட்டு. ஒங்களால எப்படி ஸார் என்னைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமாய் எழுத முடிஞ்சது? இங்கே ஒங்களுக்கு பிரண்ட்ஸ் இருக்கிற தைரியமா?"

"எனக்கு வாக்குவாதம் பிடிக்காது. வாறேன்." "நில்லுங்க. டெம்போப் பணத்தை வாங்கிட்டுப் போங்க." "வேண்டாம். நான் வசூலிக்கிற விதமாய் வசூலிச்சுக்குவேன்." "அப்படின்னா, நீங்க இங்கே வந்திருக்கப்படாது." "பப்ளிக் பிளேஸ். நண்பர்களைத்தான் பார்க்க வந்தேன். செளரிராஜன் ஸார். நான் வாறேன்."

"டேய் நில்லுடா. ஒன்னத்தாண்டா. நில்லு." அலுவலகத்தார் அசந்தார்கள். அன்னம் பதறிப்போனாள். உமா ஒடப் போனாள் பத்மா பயத்தில் செளரிராஜனைப் பிடித்துக் கொண்டாள். கான்டிராக்டர், கசாப்புக்கடை ஆடு மாதிரி நின்றார். சரவணன் அவரை வழிமறித்தான். ஊழியர்கள் வந்து, வட்ட வட்டமாய் நின்றார்கள். அலிஸ்டென்ட் டைரக்டர் சரவணன், இப்போது ஆவேசியானான்.

"ஒன் மனசுல என்னடா நினைச்சுக்கிட்டே? இந்த ஆபீஸ் ரகசியங்களைத் திருடுனது மட்டுமில்லாமல், இங்கேயே வந்து உலாத்துற அளவுக்கு ஒனக்கு யாருடா தைரியம் கொடுத்தது? சொல்றதை நல்லாக் கேளு. இப்போ கூட. ஒன்னை என்னால போலீஸ்ல ஒப்படைக்க முடியும். ஆனால் ஒன்னை மாதிரி நான் நடந்துக்க விரும்பல. இனி ஒரு தடவை. ஒன்னை இந்த ஆபீஸ்ல நான் பார்த்தேனா, போலீஸுக்கு போன் செய்யமாட்டேன். நான் பனை மரத்துல ஏறி நொங்கு வெட்டுனவன். தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிச்சவன். ஒன் கழுத்துக்கு மேல் தலையிருக்காது. எதுக்குய்யா ஆபீஸிற்கு வந்தே? ஏ.ஓ! நீயா இவனை வரச் சொன்னே?"

"இல்லே ஸார். இல்லவே இல்ல ஸார்."

தங்கமுத்து, ஏ.ஓ வைக் கேட்டான். நீதானய்யா போன்ல பேசி வரச் சொன்னே."

சரவணன், அவனை கையமர்த்தினான்.

"மிஸ்டர் செளமி. கெட் அவுட் கெட் அவுட் மேன். விபரீதமாய்