பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வேரில் பழுத்த பலா

சரவணன், தனது அறைக்குள் வந்தான். அதற்காகக் காத்திருந்தவர் போல், சிதம்பரம் வந்து, ஒரு தம்ளரில் தண்ணீர் வைத்தார். அவன் எதுவும் பேசாததைக் கண்டு திரும்பினார். திரும்பிய தீ முகத்தில், நேருக்கு நேராய் தென்பட்ட நிர்வாக அதிகாரியை முறைத்தபடியே, சிதம்பரம் வெளியேறினார்.

சரவணனுக்கு தன்மீதே எரிச்சலாக இருந்தது. என்ன இருந்தாலும் நான் இந்த அலுவலகத் தலைவன். என்னோட கோபத்தை இப்படி காட்டியிருக்கக் கூடாது. சிக்கல்கள் வந்தாலும், அவற்றில் சிக்காமல் சீராக நிற்பவனே மனிதன். எனக்கு என்ன வந்தது? ஒருவேளை, கோவிலுக்குப்போயிருக்கலாமோ? நல்ல வேளை, போகல. கோவிலை நினைத்தாலே. இப்படி வந்திருக்கு. போயிருந்தால் கொலையே நடந்திருக்கும். இவ்வளவு நடந்தும் நிர்வாக அதிகாரி முகத்தில் ஒரு அழுத்தம் தெரியுதே. கல்லுளிமங்கன் மாதிரி இருக்கானே. இந்த கான்டிராக்டர்கூட நீங்களே என்னை வரவேற்பீங்கன்’னு சபதம் போட்டுட்டுப் போறான். என்னவாய் இருக்கும்?

சரவணன் நிலைகொள்ளாமல் தவித்தான். ஒரு மணிநேரத்தில் அவன் கேள்விக்குப் பதில் கிடைத்தது.

நிர்வாக அதிகாரியே வந்து ஒரு ரகசியக் கவரை அவனிடம் கொடுத்துவிட்டு, நிற்காமலே போய்விட்டார். அவன், கவரை அவசர அவசரமாய் கிழித்தான். உள்ளே இருந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்தான். அவன் முகம், வெள்ளையாய் வெளுத்தது. மேஜையில், அதை மல்லாக்க போட்டபடியே, பல தடவை படித்தான். ஒரு தடவை கொதித்தான். மறுதடவை தவித்தான். பிறகு எரிந்தான். அப்புறம் அணைந்து போனவன்போல் ஆகிவிட்டான். நாற்காலியில் முடங்கியபடியே, அதைப் பார்த்தான். ஆங்கில வாசகங்களை தமிழாக உட்படுத்திக் கொண்டான்.

தாக்கீது

1. செளநா ஸ்டேஷனரி மார்ட்டிற்கு, இந்த நிதியாண்டில் இருந்து, மூன்று வருட காலத்திற்கு எழுது பொருள் சாமான்களை வாங்கிக் கொள்வதற்கு, கான்டிராக்ட் இதன் மூலம் வழங்கப்படுகிறது. அஸிஸ்டென்ட் டைரக்டர் திரு. சரவணன் இந்தக் கம்பெனியின் உரிமையாளர் திரு. செளமி நாராயணனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து அவரது கையெழுத்தை உடனடியாக வாங்கி அனுப்ப வேண்டும் என்று கோரப்படுகிறார்.

2. சென்ற ஒப்பந்த காலத்தில் செளநா மார்ட் சிறப்பாகப்