பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வேரில் பழுத்த பலா

"எனக்கா. சாப்பாடா. எப்படி இறங்கும்?"

சரவணன் பேசாமல் இருந்தான். அவனையே அசைவற்றுப் பார்த்த அன்னம், அங்கே நிற்க முடியாமல், நடந்து நடந்து நின்று நின்று போய்க் கொண்டிருந்தாள். சரவணன், அவளைக் கூப்பிட்டான்.

"மேடம். இந்த லெட்டர் விவகாரத்தை யார்கிட்டேயும் பேசப்படாது. தங்கமுத்துகிட்டே கூட. பிராமிஸ்?"

"யெஸ் ஸார். ஈவினிங்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் இருக்கேன் ஸார்."

"தேங்க் யூ."

"சாப்பிடுங்க ஸார்."

"நன்றி."

9

அலுவலகத்தின் நேரம், கான்டிராக்டரின் கையாட்களாக மட்டுமல்ல. காலாட்களாகவும் நடப்பதுபோல் தோன்றும் செளரி-பத்மா-உமா கம்பெனிக்கும். ஒரு சில உதிரி மனிதர்களுக்கும், அவசர அவசரமாகவும், சரவணனுக்கு ஆமை வேகத்திலும், அன்னத்திற்கு, நத்தை வேகத்திலும் கழிந்தது. மாலை, ஐந்து மணியைக் கடந்து, அதற்கு மேலும் நீண்டு கொண்டிருந்தது. ஆனாலும், அந்த கான்டிராக்ட் ஆட்கள் போகவில்லை. செளரிராஜன், மேஜையை தாளம் போட்டபடியே உள்ளே பார்த்தார். "இன்னும் செளமி நாராயணனுக்கு, லெட்டர் போடாமல் இருக்கான். எப்போ போடுவான்? கல்லு மாதிரி இருக்கான். எதையும் கண்டுபிடிக்க முடியல. இந்த ஆபீஸ்ல பழமும் தின்னு, கொட்டையும் போட்டவன் நான். என்னோட பிரண்டையா நீ எடுக்கப் பார்த்தே? ஒன்னையே நான் எடுக்கேன் பார். ஒன் கையில இருக்கிற காகிதத்தோட ஒவ்வொரு எழுத்தும். டில்லியில் டைப் அடிக்கதுக்கு முன்னாலயே எனக்குத் தெரியுமாக்கும்."

காத்துக் காத்து, ஏதோ வேலை இருப்பது போல் பாசாங்கு செய்த செளரி, இரண்டு பெண்டாட்டிக்காரன் மாதிரி, பத்மா-உமா சகிதமாய் போய்விட்டார். அவர்கள் போவதற்காகவே காத்திருந்த அன்னம், சரவணனின் அறைக்குள் வந்தாள். அவனைப் பார்க்கவே, அவளுக்குப் பாவமாக இருந்தது. அடியும், தலையும் அச்சடித்தது மாதிரி இருந்தவரு.