பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 77

இப்போ நச்சடித்தது மாதிரி ஆயிட்டாரே. பாவிங்க... இப்படி க்கிட்டாங்களே. சாப்பிடக்கூட மறுத்திட்டாரே. கடவுளே. கடவுளே. நாங்க என்னமோ இருக்கோம். நீ எப்படி இருக்கே? இருக்கியா?

சரவணன் விழியுயர்த்தினான். வாயசைக்கான். அன்னம் உட்கார்ந்தாள்.

"ரெடியா மேடம்."

"ரெடி ஸ்ார்."

"டெமி அபீஷியல். டி.ஓ. லெட்டர். என் பேரு. பதவியை போட்டுக்கங்க. உ.ம். சொல்லட்டுமா? எஸ். ஸார்."

"ஐ ஹியர்பை டெண்டர் மை ரிசிக்னேஷன்." "ஸார். ஸார். ராஜினாமாவா செய்யப் போlங்க? ராஜினாமாவா?"

"ஆமாம்மா.. என்னால வேலை பார்க்க முடியாது. நாளையில் இருந்து ஆபீஸுக்கே ஒரு பெரிய கும்பிடு. உம். எடுத்துக்கங்க."

"நான் எழுதமாட்டேன் ஸார்." குறிப்பெடுக்க மாட்டேன் ஸார். வேணுமுன்னால் மெமோ கொடுங்க ஸார்."

அன்னத்தின் கண்கள் கலங்கின. அப்புறம் அவற்றில் இருந்து, நீர் சொட்டுச் சொட்டாகி, வெள்ளைத் திரிபோல், கன்னங்களில் பாய்ந்தன. வாயில் விம்மல்கள், வெடிவெடியாய் வெடித்தன. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பிறகு எழுந்து, சுவர் பக்கமாய் நின்றபடி கேவினாள். பின்னர் அடம்பிடிக்கும் குழந்தைபோல், சரவணனை, விம்மலுக்கு ஒரு தடவை பார்த்துக் கொண்டாள். சரவணன், தலை நிமிர்த்தினான். எழுந்து போனான். என்ன செய்கிறோம் என்று தெரியாமல், அவள் கையைப் பிடித்திழுத்து, நாற்காலியில் உட்கார வைத்தான். இருக்கையில், மீண்டும் உட்கார்ந்தபடியே தழுதழுத்த குரலில் ஒப்பித்தான்.

"ஒங்களோட அன்புக்கு அடிபணிகிறேன் மேடம். எனக்கும். வேலையை விட்டுவிட்டால், அடுத்த சாப்பாடு நிச்சயமில்லே. வயது வந்த தங்கையைக் கரையேத்த முடியாது. முடியக் கூடியது. என் அண்ணி பழையபடியும் வயல் வேலைக்குப் போறதுதான். ஆனால் அப்படி ஒரு நிலைமையை என்னால தாங்கிக்க முடியுமா என்கிறது நிச்சயமில்ல. இவ்வளவையும் மீறி, நான் ராஜினாமா செய்யுறேன்னால், என் மனம் படுற பாட்டை நீங்க புரிஞ்சுக்கலாம். பிளீஸ். நான் சொன்னத எடுங்க ஐ ஹியர்பை உம் எடுங்க."

"எடுக்க முடியாது ஸார்."