பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வேரில் பழுத்த பலா

"அப்படின்னா. போங்க.."

"போக முடியாது ஸார்."

"சரி நானாவது போறேன்."

"போக விடமாட்டேன் ஸார்."

எழுந்து, இரண்டடி நடந்தவனை, அன்னம் வழி மறித்தாள். அவனோ, அவளை தர்மசங்கடமாகப் பார்த்தான். அவள் காட்டிய பாசம் அவனை உலுக்கத்தான் செய்தது. உலுங்கிய உள்ளத்தை, மூச்சில் பிடித்து வைத்து, ஒரே மூச்சாய்ப் பேசினான்.

"இந்த ஆபீஸ்ல என்னால குப்பை கொட்ட முடியாதும்மா."

"குப்பைக் கூளங்களை அப்படியே விட்டுடப்படாது. நீங்க கொட்டாட்டால், வேற யாராலும் முடியாது."

"கேட்கதுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கு. ஆனால்." "இந்த அக்கிரமத்தை மேல் அதிகரிகளுக்கும், மந்திரிக்கும் தெரிவிக்கலாமே. அதுவரைக்கும் கான்டிராக்டரை உள்ளே விடாமல் பார்த்துக்க முடியாதா லார்?"

"அதையும் யோசித்தேன். இது அவசர அவசரமான காலம். எந்த ஆபீஸர் அநியாயமாய் நடந்தாரோ, அவர்கிட்டயே நான் எழுதுன புகார் தீர்ப்புக்குப் போகும். அப்புறம் நான்தான் தீர்ந்துபோவேன். இப்போவாவது. மரியாதையாய் வேலையை விட்டுட்டு, வேற வேலை தேடலாம், அது இல்லாமல், நான் எதையோ எழுதப் போய், அதையே சாக்காக்கி, அவங்க என்னை டிஸ்மிஸ் செய்தால், எனக்குச் சேரவேண்டிய பணமும் சேராது. வேற வேலையும் கிடைக்காது. அதோட. இந்த அற்ப மனிதர்கள் கண்ணுல விழிக்க விரும்பல."

அன்னம் கொதித்துக் கேட்டாள். "மூன்றே மூன்று பேரை வெச்சு ஏன் ஸார் ஆபீஸ் ஆட்களை தீர்மானிக்கிறீங்க? ஒங்களுக்காக காலையில், எத்தனை பேர் கான்டிராக்டரை முரட்டுத்தனமாய்ப் பார்த்தாங்க தெரியுமா செளரிராஜன் தானா ஒங்களுக்குப் பெரிசாத் தெரி ம்? தங்கமுத்து இல் சிதம்பரம் இல் இவங் போகட்டும். நான் எதுக்கு ஸார் இருக்கேன்? உட்காருங்க ஸார். கடைசில பெரிசாய் இருக்கிற ஆபீஸருக்குத் தெரியப்படுத்துங்க ஸார்."

"நீங்க நினைக்கறது மாதிரி இது சின்ன விஷயம் இல்ல மேடம். மனுப் போட்டதில் இருந்து, அது முடியுறது வரைக்கும் மன