பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 79

நிம்மதியில்லாமல் போயிடும். இந்த டிபார்ட்மென்டை எதிர்த்து நிற்கிறதுக்கு ஆள் பலமோ. பண பலமோ.. எந்தப் பலமோ.. என்கிட்ட இல்லை. நல்லவனுக்கு அடையாளம், சொல்லாமல் போகிறதுதான்."

அன்னத்தின் கண்களில் ஒரு ஒளி. அவனை, நேருக்கு நேராய்ப் பார்த்தாள். தீர்க்கத்தோடு தீர்மானமாய்ப் பேசினாள்.

"ஒரு வேளை கான்டிராக்டரை உள்ளே விடாமல். அதனால சஸ்பெண்டாகி, போராட்டம் முடியுறது வரைக்கும் பாதிச் சம்பளந்தானே வருமுன்னு யோசிக்கிறீங்களா? அதை விட வேற வேலைக்கே போயிடலாமுன்னு நினைக்கிறீங்களா?"

சரவணன் தலையாட்டினான்.

"வீட்டுக்கு வீடு வாசல்படிதான் ஸார். ஒங்களை மாதிரி நேர்மையானவங்க எங்கே போனாலும் விம்புதான். அதனால. தெரிஞ்ச வம்பு தெரியாத வம்பை விட நல்லது. ஒங்களுக்கு அப்ப்டி ஒரு நிலைமை வந்தால், நான் இருக்கேன் ஸார். என்னோட கல்யாணத்துக்காக பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வச்சிருக்கேன். தொளாயிரம் ரூபாய் சம்பளத்துல, முந்நூறு ரூபாய் எனக்குப் போதும். மாதா மாதம் அறுநூறு ரூபாய் தந்துடுறேன். கல்யாணப் பணத்தையும் தாறேன். ஒங்களோட தன்மானப் போராட்டத்தைவிட எனக்குக் கல்யாணம் முக்கியமில்லை. ஏன் லார் யோசிக்கிறீங்க?"

அன்னத்தையே வெறித்துப் பார்த்த சரவணன், அவளின் அன்புப் பிரவாகத்தில் கரைந்து போனான். ஆனாலும், அவன் அவளை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பாததுபோல், தழுதழுத்த குரலில் பதிலளித்தான்.

"ஓங்களோட தாயுள்ளத்துக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலம்மா. இந்த ஒரு வார்த்தையே போதும். ஆனால், அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு, ஒங்க உதவியை நான் ஏற்றுக்கிட்டால், ஊர் என்ன பேசும், நம்மோட உறவைப் பத்தித்தான் என்ன நினைப்பாங்க. ப்ளீஸ் டிக்டேஷன் எடுங்க."

"ஊரோ, ஆபீஸோ பேசுனால் பேசட்டுமே ஸார். ஊருக்குப் பயப்படனுமுன்னு நீங்க நினைச்சால், என்னை வேணுமின்னால் உறவாக்குங்க. இதோ என் கழுத்து. நீங்க எப்போ வேனுமானாலும் ஒரு மஞ்சள் கயிறைப் போடலாம்."

சரவணன் திடுக்கிட்டு எழுந்தான். அவளையே உற்று உற்றுப் பார்த்தான். அவளோ, வரம்பு மீறிப் பேசிவிட்டதை உணர்ந்தவள் போல்,