பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வேரில் பழுத்த பலா

நெற்றியை கைகளால் தேய்த்தாள். இருவருக்கும் இடையே, எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளைக் கண்டவள் போல், தவித்தாள். அவனின் நேரடிப் பார்வையைச் சந்திக்கும் தைரியமில்லாமல், முகத்தை வேறுபுறமாகத் திருப்பப் போனாள். பிறகு அவனை, மேல் நோக்காய்ப் பார்த்து, "லாரி ஸ்ார். தெரியாமல் பேசிட்டேன் ஸார். என்னோட கல்யாணத்துக்காகப் பேசல ஸார். சத்தியமாய் ஒங்களோட எதிர்காலத்தை நினைச்சு. தத்துபித்துன்னு உளறிட்டேன் ஸார். இனிமேல் அப்படிப் பேசமாட்டேன் ஸார். டிக்டேஷனும் எடுக்க மாட்டேன் லார்" என்றாள்.

சரவணன், அன்னத்தை ஆடாது பார்த்தான். அசைந்து அசைந்து பார்த்தான். இவளுக்கு எவ்வளவு பெரிய மனசு!... எனக்காக எப்படியெல்லாம் துடிக்காள் அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில், அணில் கடித்த பழங்களையும், பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய். இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய்விட்டதே? இப்போ, இவளை இவளையே. இவளை மட்டுமே. நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோனுதே இதுக்குப் பெயர்தான் காதலோ, வசந்தாவிடம் சொன்னதுபோல், காதல் பிரக்ஞை இல்லாமல் வருவது. எனக்கும் வந்துட்டுதோ.

சரவணனுக்கே ஆச்சரியம். ஏதோ நடந்தது போலிருந்தது. கையை நீட்டியது போலிருந்தது. அவள், தன் மார்பில் தானாய் சாய்ந்தாளா. அவனாய் சாய்த்தானா? அவனுக்கும் புரியவில்லை. அவளுக்காவது தெரியுமா என்று அறிவதுபோல், தன் மார்புக்குள் அடைக்கலமானவளைப் பார்க்கிறான். அவள், 'கண்மூடி'தனமாய் கிடக்கிறாள்.

திடீரென்று டெலிபோன் ஒலி.

சரவணன், அவளை மென்மையாய் விலக்கிவிட்டு, ரிnவரை எடுத்தான்.

"யாரு. வசந்தாவா? அண்ணி பேசனுமா? கொடு. உம். என்ன அண்ணி. வசந்தா மாறிட்டாளா? அந்தப் பயலுக்குச் செருப்பைத் தூக்கிக் காட்டினாளா? குட். போலீஸ் அதிகாரிதான் வேணுமா? என்ன. வசந்தாவே என்கிட்டச் சொல்லச் சொன்னாளா? சரி. நான் அவன்கிட்ட உளறல. அப்புறம் அண்ணி. ஒங்க வீட்டுக்கு, ஒங்க தங்கையை எனக்குக் கொடுக்கிறதாய் எழுதிட்டிங்களா? இன்னும் எழுதலியா? வேண்டாம். வீட்ல வந்து விவரமாய் சொல்றேன். டெலிபோன்ல பேசிப் பழக்கம் இல்லாட்டாலும் நல்லாத்தான் பேசுறிங்க."