பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வேரில் பழுத்த பலா

நிமிர்த்துவதற்காக, அதைத் தாங்கிப் பிடிக்கும் முட்டுக்கம்பு. ஒரு அரசு ஊழியனை, நேர்மையாய் செயல்பட முடியாமல் தடுப்பது சட்டப்படிக் குற்றம். சமூகப்படி துரோகம். இதை அரசே செய்தாலும், குற்றம் குற்றந்தான். அதுவும் குற்றவாளிதான்.

சரவணனின் உள்ளுலகில் அலுவலகப் போர், படம் படமாய் விரிகிறது. அதைப் பயமுறுத்த வேண்டும். பயப்படலாகாது. கண்முன்னால் கரடுமுரடான பாதை கூட இல்லை. இனிமேல் அவனேதான் பாதையே போடவேண்டும். பரீட்சார்த்த பாதை. அக்கினிப் பாதை.

சரவணன் படபடக்கவில்லை. குழம்பிப்போகவில்லை. அன்னத்தை, குதூகலமாய்ப் பார்க்கிறான். அவளும், ஒங்களுக்கு அந்தக் கால வழக்கப்படி வெறுமனே திலகமிடுபவள் அல்ல நான் என்று சொல்லாமல் சொல்வதுபோல் கரத்தை தூக்கி நிறுத்தி, முஷ்டியாக ஆக்குகிறாள்.