பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் போதுமா?

ஒரு கூட்டத்தைப் பார்த்தவுடனேயே, அது எப்படிப்பட்ட கூட்டம் என்று இலக்கணப்படுத்தி விடலாம். அரசியல்வாதிகள், தங்களின் கொள்கை முழக்கங்களுக்கு ஏற்ப தொண்டர் கூட்டம் குண்டர் கூட்டம் என்று ஒரு கூட்டத்தையே தங்கள் போலித்தனங்களுக்கு ஏற்ப போலியாக்கினாலும், பொதுவாக சென்னை நகரில் ஒரு கூட்டத்தை அடையாளம் கண்டுபிடிப்பது பொதுமக்களுக்கு மிகவும் எளிதான காரியம். இன்னும் சொல்லப்போனால் இது ஒன்றுதான் அவர்களுக்கு எளிதான காரியம். ஆனாலும் இதற்கு விதிவிலக்குப் போல அதாவது விதியே, எக்கேடாவது கெட்டு, எப்படி வேண்டுமானாலும் போங்கள் என்று தங்களை விலக்கு செய்தது போல் - இதோ இந்தப் பரந்து விரிந்து பருத்த சென்னை மாநகரில், எல்டாம்ஸ் சாலை மவுண்ட்ரோடில் வந்து சங்கமிக்கும் இடத்திற்கு சிறிது தொலைவில் திருமுருகன் ஆலயத்திற்கு அருகே பெருந்திரளாய் கூடி நிற்கும் அந்தக் கூட்டத்தை எப்படி அடையாளப் படுத்துவது? எந்த வகையில் சேர்ப்பது?

அந்த முருக கோவிலுக்கு அருகே நின்றதால் மட்டுமல்ல, பெரும்பாலானவர்களின் கரங்களில் திருவோடு மாதிரி இருந்ததால், அது பண்டாரக் கூட்டம்போல் தோன்றும். ஆனால் இரும்பாலான வட்ட வடிவமான ஓரளவு பெரிய அந்த பாண்டுக் கூடையைப் பார்த்த கண்ணோடு அந்த மக்களைப் பார்ப்பவர்கள் அப்படிச் சொல்ல மாட்டார்கள். சின்னத் திருவோடு பண்டாரங்களின் வயிறுகளில் இருந்து பல பானைகளை - சதையாலான பானைகளைச் செய்ய முடியும். ஆனால் இந்தப் பெரிய திருவோடு கூட்டத்தினருக்கு வயிறு தவிர மீதி எல்லா உறுப்புகளும் இயங்குகிறதோ இல்லையோ, அவை இருப்பதை உடம்பில் காட்டின. ஒரு சிலர் வாயில் குதப்பும் வெற்றிலையையும் சாலையில் தெறித்த சிவப்புத் துளிகளையும் வைத்து, அவர்களை, கல்யாண விருந்துக் கூட்டம் என்றும் சொல்லலாம். உற்றுப் பார்த்தால் அப்படியும் சொல்லமுடியாது. கல்யாணக் கூட்டம் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை போடும். ஆனால் இந்தக் கூட்டத்து மனிதர்கள் வெற்றிலையையே சாப்பாடாக மென்றுப் பார்ப்பவர்கள். வெற்றிலை