பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஒருநாள் போதுமா?

சப்பாத்தியாம். கொட்டைப்பாக்கு உருளைக்கிழங்காம். உமிழ்நீர் சாம்பாராம். வாயே வயிறாம்.

ஒருவேளை இவர்களை இழவுக் கூட்டம் என்று சொல்லலாமா? தலை காய்ந்த தோற்றத்தையும் வெறுமையான கண்களையும் பொறுமையான கால்களையும் வைத்துக் கணக்குப் போட்டால் மரணக் கணக்கிற்கு இதுவரை கேள்வியாக இருந்து, இப்போது பதிலாகிப் போன ஒரு சடலத்தின் இழவுக்காக நிற்பவர்களைப் போல் இவர்கள் தோன்றினாலும், ஒரு சின்ன வித்தியாசம். இவர்களில் ஒவ்வொருவரும், தானே செத்து, தனக்குத்தானே இழவு நடத்திப் பார்ப்பவர்கள் போல் தோன்றினார்கள். இந்த வகையில் இவர்கள் சுயம்புச் சவங்கள், ஆகையால், இவர்களை எப்படிப்பட்ட கூட்டம் என்று வசதி வாய்ப்பு உள்ளவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, பார்க்கப்படுகிறவர்களுக்கும், ஆனாலும், தமிழனின் தனிப் பண்புப்படி, இவர்களுக்கு ஏதாவது முத்திரை குத்த வேண்டுமே. என்ன முத்திரை குத்தலாம்?

மனிதக் கூட்டம் என்று மட்டும் சொல்லலாமா? மனிதன் என்றால் இன்னொரு அர்த்தமும் உண்டு என்பதை ஒப்புக் கொள்வதற்காக இருந்தால், அப்படி அழைக்கலாம். எப்படி அழைத்தாலும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். பல்லவனில் போகும், மத்திய தர மைனர்கள், வரவர நாடே கெட்டுப் போச்சு என்று இந்தக் கூட்டத்தைப் பார்த்துப் பேசிக்கொள்கிறார்கள். சாலையில், கார்களில் சவாரி செய்பவர்கள், கூட்டத்தைப் பார்க்கிறார்களே தவிர, அந்தக் கூட்டம் எதற்காக அப்படி நிற்கிறது என்று யோசித்துப் பார்க்க மறுக்கிறார்கள். தங்களின் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பாதவன்போல் போகிறார்கள். அவர்களில் ஒரு சில பிஸிகள் இந்தக் கூட்டத்தால் காரை வேகமாகச் செலுத்த முடியவில்லையே என்பது மாதிரி, முறைப்பது போல்கூட போகிறார்கள். சில படித்த பெண்கள் அவர்களின் அழுக்கு தங்களின் புடவையில் பட்டுவிடக் கூடாதே என்பதுபோல் விலகிப் போகிறார்கள். ஒரு சில உறவுக்கார நடுத்தர வர்க்கக்காரர்கள். தங்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் கடன் கேட்டுவிடக்கூடாதே என்று தங்களுக்குத் தாங்களே ஒரு கற்பனையை உருவாக்கிக் கொண்டு, அவசரமாய் போகிறவர்கள் போல் போகிறார்கள்.

எல்லாருமே அந்த போக முடியாதவர்களைப் பார்த்து, ஏதோ ஒரு எதிர்மறை உணர்வில் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவாகள

ஒருவனை வீரனாக்க ஒன்பது பேரைப் பேடியாக்கும் சினிமாக்காரனைப் போல், இதையே எழுதும் சரித்திர நாவலாசிரியப்