பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி மித-த்தல்: நீர் முதலியவற்றின் மேற்பரப்பில் மூழ்காமல் நிலைகொள்ளுதல் [மீ>மீது>மித> மித-த்தல்] மிதி-த்தல்: காலின் அடிப்பகுதி படும் வகையில் ஒன்றின் மீது காலைப் பதித்தல். மத்து = அழுத்துதல் [மத்து>மத்தி > மதி>மிதி-த்தல்.] மிரட்டல்: செய்கையால், பேச்சால் அச்சப்படச் செய்தல் [மிரள்> மிரட்டல் மிளகு : சமையலில் பயன்படுத்தும் சின்னஞ்சிறிய காரமான, கறுப்பு நிறத்தில் முள்போன்ற மேற்பரப்புள்ள விதைக்காய் [ முல்>முள்> முளகு மிளகு] மிளிர்-தல்: 1. ஒளிர்தல், 2. பெருமையடைதல், 3. குதித்தல். [முல்>மிள் (மின்னுதல்)> முளிர் மிளிர்-தல்] மின்னல் : 1. மழை முகிலில் தோன்றும்போது ஏற்படும் மின்னொளி, 2.ஒளிமிக்க காசு. [ முல்>மில் மிள் மின்னல் மின்னு-தல் : கண்களில் முகத்தில் ஆர்வம், ஆசை முதலியவை தெளிவாகப் புலப்படும் வகையில் மிளிர்தல் [மின் மின்னு மின்னு-தல்] மீசை : 1. ஆண்களின் மேல் உதட்டின் மேல் இருக்கும் முடி, 2மேலிடம். மிசை = உயர்ச்சிப் பொருள் [மிசை> மீசை] மீட்டு-தல்: 1. மீளச்செய்தல், 2. இசைக்கருவி, யாழ் முதலியவற்றின் நரம்பை விரலால் தெறித்தல். [மீள் - தல்> மீட்டு-தல்] 147