பக்கம்:வேலின் வெற்றி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ வேலின் வெற்றி அப்பொழுது திருமால் அவரை நோக்கி, "எல்லா - - உயிர்களும் தாமேயாகியும், அருவமாகியும், திருமால் உருவமாகியும் இவ்வாறு மூவகை இயல் கூற்று பினையுடைய மூலகாரணமாயுள்ள தேவ - தேவன் யோகத்தின் முறைமையைக் காட்டுவாராகில், முன்போல் காம இச்சையை யாவரே கொள்வார்? பிரமனே முழுமுதற் பொருளாகிய ஈசன், முனிவருக்கு ஞான போதம் உணர்த்தும் மெளன நிலையை விட்டு, பருவத மன்னன் புதல்வியாகிய பார்வதியைத் திருமணம் புரிந்தால், நின் படைப்புத் தொழில் நிறைவேறும்; அன்னார்க்கு ஒரு குமரன் தோன்றினால், சூரன் குலம் அடியோடு அழியும்; துன்பமுற்ற உலகம் எல்லாம் முன்புபோல் வாழ்ந்திருக்கும்; அது நிறைவேறுதற்கு ஓர் உபாயம் கூறுகிறேன், கேள்: இம் மாநிலத்தில் உள்ள யாவரும் மயங்கும்படி மலர்க்கணை தொடுக்கும் மன்மதனைக் கயிலையங்கிரிக்கு அனுப்பினால், ஈசன் மெளனம் நீங்கி, சத்தியாகிய உமையை மணந்து ஒரு மைந்தனைத் தந்தருள்வார்" என்றார். அப்படியே பிரமதேவன் மன்மதனை அழைத்து, "ஐயனே! கங்கையைச் சடையில் அணிந்த சிவபெரு மான் மெளன நிலையை நீக்கி, மலைமக ளாகிய 'பார்வதியைத் திருமணம் செய்யுமாறு: நின் பூங்கணைகளைத் தூவு வாயாக எங்கள் பொருட்டு இப்பொழுதே செல்க" என்று வேண்டினான். மன்மதனைப் பிரமன் வேண்டல் அது கேட்ட மன்மதன் சிவ நாமத்தைச் சொல்லி, செவிகளைப் பொத்திக்கொண்டு, "பிரமனே திருமாலுடைய மார்பில் சிறப்பு வாய்ந்த திருமகளை நான் நிலையாக வைத்தேன்; நின்னுடைய அழகிய நாவில் கலைமகளை அமைத்தேன். இன்னும் மறைகளை யறிந்த வசிட்டன், 1פifá,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/14&oldid=919697" இலிருந்து மீள்விக்கப்பட்டது