பக்கம்:வேலின் வெற்றி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$56 - வேலின் வெற்றி மெய்யுணர்வு நீங்கியபொழுது சூரன் மனத்தில் சீற்றமும் பகைமையும் நிறைந்தன. "குன்றம் எறிந்த , குமரனைப் பிறகு பார்த்துக்கொள்வேன். முன்னே d இக் கடும் போரை மூட்டிய வானவரைச் ៩, முடித்துச் சற்றே சீற்றம் தீர்வேன்" என்றான், சூரன்: அக் கருத்தை நிறைவேற்றுமாறு மீண்டும் ஒரு மாய மந்திரத்தை ஒதினான். மண்ணும் விண்ணும் காரிருள் செறிந்தது. அதனுள்ளே மறைந்து நின்றான் சூர்ன். கதிரவனும் அவ் விருளைக் கண்டு பயந்து பதுங்கினான். அமர் செய்யக் கருதி அந்தரத்தில் எழுந்தான் அசுரர் கோமான். அதனைத் தம் அறிவாலும், குறிப்பாலும் தெரிந்த வானவர் சிதறி ஓடினர் காலனைக் கண்ட உயிர்போல் கலங்கினர். "அடியவர்க்கு இனிய ஆண்டவனே. ஒலம் மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற முதல்வனே, ஒலம் முனிவர்தம் தலைவனே, ஒலம் கருதுதற்கரிய பெரியோய், ஒலம்: எல்லாம் படைத்த இறைவர், ஒலம் கண்ணுதற்பெருமான் அருளிய கடவுளே, ஒலம்: தேவ தேவா, ஒலம் பகைவரைத் தகர்க்கும் பரமனே, ஒலம்: வேற்படை எடுத்த விமலா, ஒலம் பாவலர்க்கு எளியாய், ஒலம் பன்னிரு. கரத்தாய், ஒலம்! மூவரும் ஆகி நின்ற முழு முதற் பொருளே, ஒலம்: ஒலம் அடியேம் படும் பாட்டை நீ சிறிதும் அறிகிலை போலும் இன்னும் சற்றே காலம் தாழ்ப்பின், மாய இருளில் மறைந்து நின்று சூரன் உலகமெல்லாம் அழித்திடுவான். ஆதலால், இன்னே அவனுயிரைக் கவர்ந்து எம்மைக் காத்தருள்க' என்று வேண்டினான், மயில் வாகனமாக நின்ற இந்திரன். வானவர்கோன் சொல்லிய மொழிகளையும், அசுரர் கோன் செய்த கொடுமைகளையும் அறிந்த முருகன், தம் வெந்து கையில் அமைந்த நெடுவேலை நோக்கி, "அச் சூானது மார்பைப் பிளந்து கணப் பொழுதில் வருக" எனப் பணித்து விடுத்தார். இருதலை படைத்த வேற்படை உடனே புறப்பட்டது; ஆயிரம் கோடி ஞாயிறுபோல் ஒளி வீசிற்று; தீச் க்டர்களை உமிழ்ந்து சென்றது. அவ் வொளியைக் கண்ட மாய இருள் முற்றும் மாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/164&oldid=919750" இலிருந்து மீள்விக்கப்பட்டது