பக்கம்:வேலின் வெற்றி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை #3 மணந்திட மலைமகள் பெருந்தவம் புரிந்தாள். நாம் அவ்வாறு செய்தோமில்லை" என்று பெருமூச்சு எறிந்தார், சிலர். இங்ங்ணம் இறைவன் பவனி வரும் பொழுது, திருமண விழாவினைக் காணும்பொருட்டு எல்லாப் புவனத்தில் உள்ளவர்களும் வந்து சேர்ந்தமையால் இமயமலை வருந்தி நடுக்கமுற்றது. பூவுலகத்தின் வடதலை தாழ்ந்தது; தென்தலை உயர்ந்தது. வானவரெல்லாம் ஏக்கமுற்றார். தீங்கு நேர்ந்ததோ என்று நிலவுலகத்தார் மயக்கம் உற்றார். பெருமானருகே இருந்த பெரிய முனிவரும் வருத்தமுற்றார். எல்லோரும் 'சிவனே! சிவனே! என்று ஓலமிட்டுச் சிந்தை தளர்ந்தார். அது கண்ட ஈசன் புன்னகை புரிந்து, அடியார் துயரம் தீர்க்குமாறு, நந்திதேவரை நோக்கி, "கடலைக் கையகத் தடக்கிய அகத்திய முனிவரை இங்கு அழைத்து வருக" என்றார். முனிவரும் வந்து இறைவன் திருவடியிற் பணிந்தார். அந் நிலையில், ஈசன் "குறுமுனியே இவ்விமய மலைக்கு யாவரும் வந்தமையால் வடதிசை தாழ்ந்தது; தென் திசை உயர்ந்தது; ஆயினும், முனிவா ஒப்பற்ற நீ இம் மலையினின்றும் நீங்கி வளடிார்ந்த தென்னாட்டிற் போந்து, பொதியமலையில் அமர்வாயாயின், உலகமெல்லாம் முன்போலவே சமநிலை யடைந்து விளங்கும்" என்றார். பிறை யணிந்த பெருமான் இங்ங்ணம் பணித்தபோது இனிய மொழியுடைய தமிழ் முனிவன் அச்சம் எய்தி, ஜயனே! அடியேன் செய்த குற்றம் ஏதேனும் உண்டோ? திருமணம் காண ஆசையுற்று வந்த தீவினையேனாகிய என்னை இங்கே இருக்கப் பணியாமல் நெடுந்தூரம் செல்லப் பணித்திரே என்று வருந்தினான். அப்பொழுது எம்பெருமான் முனிவரை அமர்ந்து நோக்கி, "உன்னைப் போன்ற முனிவர்கள் உலகத்தில் உண்டோ? அன்னவாகனம் உடைய பிரமனும் உனக்கு நிகரல்லன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/27&oldid=919806" இலிருந்து மீள்விக்கப்பட்டது