பக்கம்:வேலின் வெற்றி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 41 இங்ங்ணம் வெற்றி வீரனாகிய வீரவாகு தேவரும் மற்றைய வீரர்களும் மயக்கமுற்ற நிலை கண்டு தாரகன் வெளிப்பட்டான் : மாற்றாரை உற்று நோக்கினான்; நம் மாயையால் இவர் எல்லோரும் ஒழிந்தார் என்று, மண் மகிழ்ந்தான்; அம் மலையின்மீது தோன்றினான் ஒரு பெருந் தேரின்மேல் அமர்ந்து அசுரர்கள். சூழ்ந்து ஆரவாரிக்க, பொன்மயமான தன் வில்லை வளைத்துப் போர்க்களம் போந்தான். - - நாரதர் வாயிலாக நிகழ்ந்தனவெல்லாம் அறிந்த முருகப் முருகவேள் பெருமான், அஞ்சி நின்ற வானவரை நோக்கி, போரிட "எல்லோரும் கேண்மின் இப்பொழுதே நாம் வருதல் அமர்க்களம் செல்வோம்: தாரகனை வேற்படையால் தடிந்து ஒழிப்போம்; அசுரர் கோட்டையாகிய கிரவுஞ்ச கிரியையும் தகர்ப்போம். கணப் பொழுதில் நம்முடைய வீரரையும் மீட்போம்" என்று அருளிச்செய்தார். முழுமதி போன்ற ஆறு முகங்களும், கருணை பொழியும் பன்னிரு கண்களும், வேலும், வேறுள்ள படைகளும் தாங்கிய அழகிய பன்னிரு கரங்களும், அணிமணித் தண்டை ஒலிக்கும் திருவடியுங்கொண்டு போர்க்களத்தில் நின்ற முருகவேளைக் கண்டான் தாரகன் என்றால், அவன் செய்த தவம் சொல்லும் தரத்ததோ? ஆணவம் பொருந்திய மனத்தையுடைய அசுரன். இங்ங்னம் ஞான முதல்வராகிய பெருமான் கொண்ட திருக்கோலத்தைக் கண்டு வியப்படைந்து, நம்மீது போர் செய்ய வந்த இவன் கற்பனை கடந்த முழுமுதற் கடவுள்தானோ!' என்று சிந்தித்தான்; இவ்வாறு நினைத்துப் பின்பு தனது நிலைமையை எண்ணினான். எவர்க்கும் மேலாகிய ஈசனிடம் தான் பெற்ற வரமும், திறமும், மற்றுமுள்ள ஏற்றமும் நினைந்து, அகங்காரம் கொண்டு, கந்தப்பெருமானை நோக்கி, "நாராயணனாகிய திருமாலுக்கும் நான்முகனாகிய பிரமனுக்கும் வெள்ளை யானையுடைய இந்திரனுக்கும் எமக்கும் போர் நிகழக் காரணம் உண்டு. சந்திரசேகரனாகிய சிவபெருமானுக்கும் எமக்கும் அமர் நிகழ காரணம் ஒன்றும் இல்லையே! அவ்வாறிருக்க, குமரா! நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/49&oldid=919855" இலிருந்து மீள்விக்கப்பட்டது