பக்கம்:வேலின் வெற்றி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - வேலின் வெற்றி இங்கு எதற்காகப் போர்க்கோலம் கொண்டு வந்தாய்?" என்று வினவினான். அதற்கு மாற்றம் உரைக்கக் கருதிய முருகவேள், "நீங்கள் வானவரைச் சிறையில் அடைத்து வைத்தீர்கள்! நீதி செலுத்தும் முறையில் அருள்புரிதல், தண்டித்தல் ஆகிய இரண்டும் செய்கின்ற ஈசன், உங்கள் கொடுமையை ஒழிக்கத் திருவுளம் கொண்டு. எம்மை அனுப்பினார் என்றார். - அம் மொழி கேட்ட தாரகன், "திருமால், கருடன் மேல் . எழுந்து போர் புரிந்து என்மீது ஆழிப்படையை • விட்டதும், அதனை யான் கழுத்தில் அணியாகக் கூறறு கொண்டதும் நீ அறிந்திலையோ? இன்றுவரை எம்முடன் பகைத்துப் போர் செய்ய வந்தவர் யாவரும் சிறிது நேரத்தில் வீட்டினர்; அன்றி ஓடினர்; வென்றவர் யாரும் இலர்; இதை நீ கேட்டிலையோ? முன்னமே நீ போர்க்களத்திற்கு அனுப்பிய படைத்தலைவரை வென்று மலையிடை மாய்த்தேன். மேலும் பல கணங்களை ஒழித்தேன்; இவற்றை நீ உணர்ந் திலையோ? பச்சிளம் பாலனே எம்முடன் போர் செய்து துன்பம் அடையாதே சிவபெருமானிடம் செல்" என்று கூறினான். அப் போது முருகன், வஞ்சகனே மாயைக்கெல்லாம் இருப்பிடமாகிய இம் மலையையும் உன்னையும் கூரிய வேலாற் கொன்று விரைவில் எம் சேனையை மீட்போம்" என்று கூறிப் போர் தொடுத்தார். முருகவேள் விட்ட பானங்களால் அடிபட்டு விழுந்த தாகனை தாரகன, త్రిj@r சிவபெருமான் பெற்ற சிறுவன் வேள் చ్రుణాG போர் செய்து $osis, இழந்தேன். தந்தம இழந்தேன்; மயக்கமுற்று விழுந்தேன். வலிய சேனையும் அழிந்தது. நான் ஒருவனே எஞ்சி நின்றேன். என் வீரம் அழகிதன்றோ?" என்றான்; அந் நிலையில் அகங்காரத்தை விட்டான், நொடிப் பொழுது மனம் நடுங்கினான்; வியப்படைந்தான்; இவனை வெல்லுதல் அரிது போலும் என்று தகர்த்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/50&oldid=919858" இலிருந்து மீள்விக்கப்பட்டது