பக்கம்:வேலின் வெற்றி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வேலின் வெற்றி கண்ணுற்றான்; களிப்புற்றான்; நாள்தோறும் இப்படியே கொண்டு வருக என்று பணித்தான். நல்லது" என்றார், வானவர். இவ் வண்ணம் நிகழும் நாளில் சூரன் ஆற்றிய தவத்தின் செம்மையால், பதும்ை என்னும் ப்ாவை புதுமதி போன்றதொரு பிள்ளையைப் பெற்றாள்; அப் பிள்ளை காலனுக்கும் காலன்போல் விளங்கினான். பானுகோபன் என்று பெயர் பெற்ற அப் பாலன், மன்மதனே என மங்கையர் மயங்கத்தக்க பேர்ழகு வாய்ந்து வளர்ந்தான் திருமகளின் தலைவனாகிய திருமாலொடு பொருது வெற்றி பெற்றான். பானுகோபனுக்குப் பின் அங்கிமுகன், இரணியன், வச்சிர வாகு என்னும் மைந்தரைப் பெற்றாள், பதுமை, சூரன் அவர்களைக் கண்டு அக மகிழ்ந்தான். சிங்கமுக அசுரன் ம்ைந்தராய் அதிசூரனும் நூற்றுவரும் அசர வீரரின் தோன்றினர் அன்னவரது 6ುರ್ಖಾಣ Liమిడి மைந்தர்கள் சொல்ல வல்லர் சிங்கமுகன் தம்பியாகிய தரகன் முன்னர்ச் செய்த தவத்தின் வலிமையால் பால. சூரியனைப் போன்ற மைந்தன் ஒருவனைப் பெற்றான். சூரன் முதலிய மூவருடன் பிறந்த அசமுகி என்பவள். ஒருவருக்கும் வாழ்க்கைப்படாதவளாய், முறையற்ற செயல்களால் நிலையழிந்து அறம் துறந்து, வானவர்க்குரிய மாதரை உடன்பிறந்த மூவர்க்கும் உதவிவந்தாள். அவள் துர்வாச முனிவரை வலிதிற் சேர்ந்து பெற்ற மைந்தர் இருவர்; தாய் வடிவத்தவன் ஒருவன்; தந்தை வடிவத்தவன் மற்றொருவன்; வில்லவன், வாதாவி என்பது அவர் பெயர். அவ் விருவரும் அன்னையின் சொற்படி அப்பனாகிய முனிவனைத் தொழுதார்கள். இப்படிப் பெருக்கமுற்ற அசுர மைந்தரும் பிறரும், முனி வரையும் தேவரையும் மனிதரையும் வருத்துவாராயினர். சூரன் சிறப்பாக அரசு புரிந்திருந்தான். அந் நிலையில் இந்திரனைச் சிறைசெய்து, அவன் தேவியைக் கைப்பற்றக் கருதினான், அசுர மன்னன். படைத்தலைவருள் ஒருவனை அழைத்து, "நீ போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/80&oldid=919924" இலிருந்து மீள்விக்கப்பட்டது