பக்கம்:வேலின் வெற்றி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலின் வெற்றி திருக்கயிலாய மலை, ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது; .ெக., rே எல்லாம் வல்ல ஈசனார் வீற்றிருக்கும் திருக்கலேயை பெருமை சான்றது. இந்திரன் முதலிய மலை தேவர்களும், எண்ணிறந்த முனிவர்களும், பூத கணங்களும் அன்புடன் போற்றும் பேறு பெற்றது. இத்தகைய மலையில், சிவபெருமானோடு அமர்ந்திருந்த - உமையம்மை, அந் நாயகனை நோக்கி, *" கற்பனையும், காரணமும், காரியமும் கடந்த இறைவனை கண்ணுதற் பெருமானே! தன் நிகரில்லாத் GమిఉG5కు தலைவனே! நின்னை இகழ்ந்த தக்கன் என்பவன் மனையில் நெடுங்காலம் வளர்ந்தேன்; அவன் பெற்ற புதல்வி யென்றும் பேசப்பட்டேன். அங்ஙனம் பெற்ற பெயரையும் அவன் உணவை உண்டு வளர்ந்த இவ்வுடலையும் இன்றளவும் தாங்கி நின்றேன்; இனி அத் தீயவன் வழியாக வந்த நாமமும் உருவமும் தரித்தற்கு அஞ்சுகின்றேன்; அவற்றை விட்டு ஒழிப்பேன். அணை தரல் வேண்டும் என்று வேண்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/9&oldid=919944" இலிருந்து மீள்விக்கப்பட்டது