பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வே லூ ர் ப் பு ர ட் சி


1. பழைய வரலாறு


'அரசன் இல்லாத அரண்மனை; மூர்த்தி இல்லாத கோவில்; அதிகாரமில்லாத போலீஸ் இருக்குமிடமொன்று தமிழகத்தில் உண்டு என்றால் வியப்பாக இருக்கின்றதல்லவா? ஆம். அந்த ஊர்தான் வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள வேலூராகும்.

வேலூரின் வரலாறு பழைமை சான்றது; பெருமைமிக்கது. அரண் வலி சான்ற அவ்வழகிய திருநகரின் வரலாற்றில் தமிழகத்தின் வரலாறே ஒருவாறு காட்சி அளிக்கின்றது என்றால் அது உண்மைக்கு மாறாகாது. பசும்புல்லின் நுனியில் நிற்கும் பனிநீர்த் திவலையில் மாமலையின் காட்சியும் ஒளிர்வதுபோல் வேலுரரின் வரலாற்றில் தமிழ் நாட்டின் வரலாறே காட்சி தருகின்றது.

'தொண்டைநாடு சான்றோருடைத்து' என்று பாடினுள் அறிவிற் சிறந்த ஒளவை. அவள் நல்வாக்கால்