பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வேலூர்ப் புரட்சி


தேசத்தின் வாழ்வையும் வளத்தையும் நாசமாக்கிக்கொண்டிருந்தனர் பேராசை பிடித்த கிழக்கிந்தியக் கம்பெனிக் கொள்ளைக் கூட்டத்தினர். ஆர்க்காட்டு நவாபுகளின் செயலற்ற தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு நாளடைவில் காடு முழுவதையும் அடக்கி ஆளும் கொடுங்கோலர்களாகவும் அவர்கள் மாறினார்கள். வயிறு வளர்க்க வந்த வெள்ளை வணிகக் கூட்டம் சுகபோகத்துடன் வாழ வசதிகள் அனைத்தும் வலிந்து செய்து கொடுத்த முகம்மதலி 1795-ஆம் ஆண்டு இறந்தான். அவன் மகன் உமதுத்-உல்-உமாரா அரியணை ஏறினான். கர்நாடகத்தின் பலவேறு பகுதிகளையும் வெள்ளை வெறியர்கள் கைப்பற்றுவதற்குப் படையொடு சென்று பல்லாற்றானும் துணைபுரிவதில் பெரும்பயிற்சியடைந்திருந்த உமதுத்உல்-உமாசா அரியணையிலமர்ந்ததும் ஆங்கிலேயரைச் சற்றே முறைத்துப் பார்த்தான். ஆனால் சென்னைக் கோட்டையில் கொடி போட்டுக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த வெள்ளை நரிகள் உமதுத்-உல்-உமாபாவின் முறைப்பைக் கண்டு முணுமுணுக்கக்கூட இல்லை. புன்முறுவலே பூத்தன. ஆர்க்காட்டு நவாபுவின் கழுத்தை இறுக்கவல்ல கயிறு தங்கள் கையிலேயே இருக்கின்றது என்பதை அந்நாடோடிகள் நன்றாக அறிந்திருந்தனர். மேலும் உமதுக்-உல்-உமாரா 1792-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆர்க்காட்டு நவாப் - ஆங்கிலேயர் உடன்படிக் கையை மீறி கர்நாடகத்தின் வருமானத்தைக் கண்ட பேர்களுக்கெல்லாம் உரிமையாக்கி இருந்தான். இதன் விளைவாக எட்டிலே விளைந்த குழப்பங்களும் அடிபிடி