பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை


‘பின் நாட்களில் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் காரியங்களை எல்லாம் கவனித்துவந்தான். அவன் ஆளுகைக்கு உட்பட் டிருந்த அம்மாகாணத்தில்தான் ஒர் ஊரில் பேரழிவிற்கு உரிய செயல்கள் நடைபெற்றன. அச்செயல்கள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் போதிர்ச்சியை-நடுக்கத்தைத் தந்தன. அவை இரத்தம் தோய்ந்த எழுத்துக்களால் சரித்திர எடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.’1 (வேலூர்ப்) புரட்சி விரைந்து பரவியிருக்கும். அச் சந்தர்ப்பத்தில் சுதந்தரப் போரில் கலந்துகொள்ளப் பல்லாயிரக் கணக்கான மக்கள் மனக்கொதிப்புடன் தயாராக இருந்தனர். ஆனல் ஒரு சிறு பிரிட்டிஷ் படையின் தலைவனாக இருந்த கில்ஸ்பீ என்ற ஒரு மனிதனின் தீரத்தால் இந்தியாவில் அப்போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் காப்பாற்றப்பட்டது. பேரழிவிலிருந்து பிட்டிஷ் ஆட்சியை கில்ஸ்பி பாதுகாத்தான் என்று நாம் சொல்லாமம் போனாலும் திகிலிற்கும் இரத்த வெள்ளத்திற்கும் அது இரையாவதினின்றாவது காப்பாற்றினான் என்றேனும் சொல்லத்தான்வேண்டும் ’2


1. A later Governor - General, Lord William Bentinok administrated the affairs of Fort St. George. It was at a station under that presidency that those disastrous occurrences took place, which at the time excited no inconsiderble alarm both in India and at home, and which are recorded in characters of blood.

—The Mutiny of Vellore p. 4,

2. The revolt would have spread : there were known to be disaffected men, by many