பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி சுட்டனர். 101 ஹரிஹரதாஸின் பிணத்தை பரிசோதித்த டாக்டரின் குறிப்பு. இறந்தவனின் இரு கரங்களிலும் உள்ளங் கையில் குண்டு பாய்ந்த வடுக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மெம் பர்ஸ் ஆப் தி ஜூரி! 15 ஆண்டுகளுக்கு முன்பு பண்டாரப் பக்கிரி என்ற பயங்கரக் கொள்ளைக்காரன் இருந்தான். பெண்களிடம்கூட இரக்கம் காட்டாமல் அடித்துப் பிடுங்கி வாழ்ந்த பேயன் அவன். ஆனால் பலநாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல், போலீசாரிடம் கடைசி யாகச் சிக்கிக் கொண்டான். ஜெயிலிலே தள்ளப்பட்ட பண் டாரப் பக்கிரி, கம்பிகளை அறுத்து, அங்கிருந்து தப்பி, சுவர் ஏறிக் குதித்து ஓடினான். போலீசாரும் அவனை விட வில்லை; விரட்டினார்கள். தப்பிவிடுவான் என்று தெரியவே கைகளினால் தடுத்தான். இரு கரங்களிலும் குண்டு பாய்ந்தன. ஆனாலும் தப்பிவிட்டான். பிறகு சர்க் காரையும் சட்டத்தையும் மக்களையும் ஏமாற்ற, பண்டாரப் பக்கிரி ஹரிஹரதாஸ் ஆனான், அவனுடைய கள்ளக் காதலி சுந்தரி, சுந்தரகோஷ் ஆனாள். ஹரிஹரதாஸ் உபதேசம் செய்யும்போது ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை விளக்க ஒரு கையிலே திருநீறும், மற்றொரு கையிலே திருநாமமும் பொறித்துக் கொள்வது வழக்கம். அதை மகா பெரிய தத்துவம் என்று மக்கள் நம்பி னார்கள். ஆனால் உண்மையில் உள்ளங்கையிலுள்ள வடுக் களை மறைக்கவே, அந்த வேலை செய்தான் அவன். இதோ போலீசாரின் விளம்பரம். பண்டாரப் பக்கிரியை உயிருடன் பிடித்துத் தருவோருக்கு ரூபாய் பத்தாயிரமும், அவன் பிணத் தையாவது கொண்டு வருவோருக்கு ரூபாய் ஐயாயிரமும் பரிசு தருவதாக வெளிவந்த அறிக்கை. இதன்படி மூர்த்தி ஆஸ்ரமத்திலே சேர்ந்து, உண்மையைக் கண்டுபிடித்து, ஹரிஹரதாஸ் என்ற பண்டாரப் பக்கிரியைப் பிடிக்கப் போகும்போது அவன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு, மூர்த்தியைக் கொல்ல முயற்சித்தான். தற்காப்புக்காக மூர்த்தி அவனைக் கொல்ல நேர்ந்தது. ஆகவே மூர்த்தி சர்க் காமிடமிருந்து பரிசுத்தொகை பெற வேண்டியவன் குற்ற வாளியல்ல.