பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 வேலைக்காரி ஜட்ஜ்: வாட்டீஸ் தி பொஸிஷன் ஆப்தி பிராசிக்யூஷன்? பப்ளி . பி ஐ வித்ரோ தி கேஸ் மை லார்ட். ஜட்ஜ்: ஐ அக்யூட்டட் தி கேஸ். [பப்ளிக் பிராசிகியூட்டர் வழக்கை வாபஸ் வாங்குகிறார். ஜட்ஜ் அனுமதிக்கிறார்.) காட்சி—52 இடம்: வடநாட்டு வக்கீல் வீடு இருப்: மூர்த்தி, வக்கீல், பாலு, வேதாசல் முதலியார். (மூர்த்தி தன் நன்றியைத் தெரிவிப் பதற்காக வடநாட்டு சந்திக்கிறான்.) வக்கீலைச் மூர்த்தி: ஐயா! என்னைத் தூக்குமேடையிலிருந்து காப் பாற்றினீர்கள். நீங்கள் என் கண்கண்ட தெய்வம். உங்க ளுக்கு நான் என்ன கைம்மாறு வட.வ : பிரதி உபகாரம் செய்யலாம். தடை. எதுவு மின்றி பேசாமல்போய், பர்மா பாலு முதலியாரின் மகளை நீர் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். மூர்த்தி ஐயா! என் கல்யாணத்தைப் பற்றி என் பிரதிக்னை வட . வ: அதுவும் எனக்குத் தெரியும். நீர் சுகிர்தத் தைக் கல்யாணம் செய்து கொள்வதால் அமிர்தத்துக்கு எந்த விதத்திலும் துரோகம் செய்தவர் ஆகமாட்டீர். நான் வரு கிறேன்... கல்யாணத்தில் சந்திப்போம். மூர்த்தி ஐயா...ஐயா... வே. வக்கீல் சொன்னது சரியான யோசனை. பையன் என்னமோ தயங்குகிறான் போலிருக்கே?