பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேலைக்காரி 105 மூர்த்தி: சுருக்கமாகச் சொல்கிறேன். நீ பாலு முதலி யாரின் மகளாகி, பட்டுப் பட்டாடை உடுத்தி, படாடோபம் இல்லாமல், பட்டிக்காட்டுப் பார்வையில் ஏழ்மையின் தோழமை கொண்டிருந்தால் எப்படி இருப்பாயோ, அப்படி இருப்பாள் என் அமிர்தம்! காட்சி-54 இடம்: வேதாசலம் வீடு. இருப்: ஆனந்தன், வேதாசல முதலியார், மூர்த்தி, மணி, பாலு, அமிர்தம். சரசா... [மூர்த்திக்கும் சுகிர்தத்திற்கும் திரு மணம் நடக்கிறது. பரமானந்தன் ஆனந்தனாக மாறுகிறான்.) ஆனந்: மணி! கல்யாணம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்? ஊரிலே ஆயிரம் நடக்கிறது! என்ன பிர யோஜனம்? வேதா: ஊம்...ஆரம்பமாயிட்டுதுங்க. ஆனந்தனு டைய அர்ச்சனை! என் மனதைப் புண்படுத்துவதற்காகவே இவன் பூமியிலே பிறந்திருக்கிறான் போலிருக்கு! ஆனந்.உமது புண் ஆறாமல் இருக்க வேண்டும் என் பதுதானே என் ஒரே ஆசை! பாலு: இந்தாப்பா, ஆனந்தா! உன் மாமனார் உனக்கு என்ன கெடுதல் செய்தார்? அதை என்கிட்ட சொல்...நான் கேட்கிறேன். ஆனந் மாமா! உன்னை மாமா என்று அழைக்கக்கூட என் வாய் கூசுகிறது. மூர்த்தி: ஆனந்தா, போதும்! அதிகமாகப் பேசாதே! உனக்குப் பெண் கொடுத்துவிட்டதாலே நீ செய்கிற அக்கிர மங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்.