பக்கம்:வேலைக்காரி, அண்ணாதுரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 வேலைக்காரி என்கிற விதி இல்லை. இனி பொறுக்க முடியாது. தெரி கிறதா? ஆனந்: துள்ளாதே மூர்த்தி!உன் கள்ளக் காதல் கைகூடி விட்ட சந்தோஷத்தில் துள்ளுகிறாய். மூர்த்தி! என்னைப் போல் துனபத்தைக் கண்டிருந்தால் தெரியும். நீ சீமானின் மகன். சொகுசாக வாழ்ந்தாய். என் சஞ்சலத்தை நீ அறி வாயா? பசி உனக்குத் தெரியுமா? பட்டினி கிடந்தது உண்டா? பகலெல்லாம் வேலை செய்து அலுத்து இரவிலே தூக்கம் பிடிக்காமல் புரண்டதுண்டா? மூர்த்தி! நீ புத்தி உள்ளவன். கேள், என கதையை! கேட்டபின் யோசித்துப் பதில் சொல். நான் யார்? மேவார் விலாச மைனர்; சரசாவின் புருஷன்; ஜமீன் வேதாசலத்தின் மருமகன் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மணி, ஊருக்குள்ளே எனக்கு என்ன பெயர்? மணி: என் சிநேகிதன் என்றால் அதிலே சகலமும் அடக் கம். ஊருக்குள்ளே உனக்கு என்னப்பா பெயர்? குடிகாரன், சூதாடி, கூத்திக் கள்ளன்... ஆனந்; ஆம்; குடியன், வெறியன், கூத்திக் கள்ளன், மனைவியைக் கொடுமை செய்தவன், மாமனாரின் மனதை நோகச் செய்த மகா பாதகன்; இவ்வளவும் ஏன் செய்தேன் தெரியுமா? வேதாசலத்திற்கு வேதனை தருவதற்குத்தான். ஏன் திகைக்கிறீர்கள்! உண்மையின் உருவம் பார்ப்பதற்குப் பயமாயிருக்கிறதோ? அன்று கோர்ட்டிலேயும் எப்படித்தான் சகித்துக் கொண்டிருந்தீர்களோ? பாலு: ஆனந்த்! என்ன, என்ன! நீ அன்று கோர்ட்டில் இல்லையே? ஆனந்: ஆம்; கோர்ட்டிலே நான் இல்லைதான். மூர்த் திக்காக வாதாடிய வக்கீல் இருந்தாரல்லவா? பாருங்கள் அவரை. (திரையைத் தள்ளுகிறான்) நான்தான் மூர்த்திக் காக வாதாடிய வக்கீல். என் நண்பர் மணிதான் ஆஸ்ரமத்து உண்மைகளை அறிந்து சொன்னவர்.